மணிக்கணக்கான
தொடுதிரை உரையாடல்
கடந்த பின்பும் கூட
புதிதான முகமாகவே
தோன்றச் செய்கிறாய்...
ஏனோ தெரியவில்லை
ஒவ்வொரு முறையும்
ஒவ்வொன்றில் எனை
மையல் கொள்ளச் செய்கிறாய்
நீ, நான் இல்லை
ஆம் நீ , நான் இல்லை
....என் எதிர்துருவம்....
அதனாலேயே என்னவோ
அதீதமாக ஈர்க்கிறாய்....!!!!
-பவி🧚
-
தென்காசி பொண்ணு 😎
தன்னிகரில்லாதவள்
தன் அழகில் கர்வம் கொண்டவள்
புன்னக... read more
இவளின் வேதனையையும்
எதிர்பார்ப்பையும் உன்னிடம்
கொட்டினால்
குறை பேசுகிறாள் என்கிறாய் .....
எந்த மொழியைத் தான்
இவள் பிரயோகிப்பது
நீயே சொல்லிவிடு அதையும்....-
கரை சேர்த்த
துடுப்பிற்கு இல்லா
வலி கரை சேர்ந்த
கால்களுக்கு
விட்டுச் சென்ற
பின்பும் விடாமல்
தொடரும் நினைவுகள்
பதில் தருமோ...?!?!— % &-
தாழிட்ட சாளரத்தை
விடுவித்தும் கூட
புழுக்கமான உணர்வு
வானிலை மாற்றம் ஒத்த
மனித நெஞ்சத்தின்
மாற்றத்தால்....
— % &-
நின் கை தீண்டலில்
உயிர் பெற்று சிலிர்க்கும்
நீர் போன்றே- நின்
நினைவுகளின் தீண்டலில்
ஓயாது சிலிர்த்து கொண்டிருக்கிறேன்...!!!
— % &-
தொலைந்த பின்
தேடுவது உன்னோடு
சேர்ந்து எனில்
தொலைவதும் சுகமே
எனக்கு...!!!— % &-
இயல்பு வாழ்வை
மறக்கும் பொழுதில் தான்
உணர்ந்தேன் - வெற்றிடத்தை
நிரப்பும் காற்றாய் மனம்
ரணமாய் இருப்பதை...!!!
— % &-
அவனின் கண்கொட்டா
விழி தீண்டலுக்கு
ஒவ்வொரு நொடியும்
இரையாகி மீண்டும்
உயிர்ப்பிக்கும்
இவளின் நாணம்...!!!
— % &-
கேட்டுக் கொண்டே தான்
கடக்கிறது ....அவளின்
அளவளாவிய காதல் ஏக்கத்தை
எங்கு சென்று பொழியும்
என்பதோ - அறியாத ஒன்றாகவே!!!— % &-