உணர்வோடு இயைந்த
உயிரில்லா உயிர்கள்
~ பொன்னியின் செல்வன்~-
அலைகடலும் ஓய்ந்திருக்க...
அகக்கடல்தான் பொங்குவதேன்...!
நிலமகளும் துயிலுகையில்..
நெஞ்சகந்தான் விம்முவதேன்...!
-சமுத்திரகுமாரி-
இன்னமும் என்
நினைவுகளில்
கோடியக்கரை
ஓடத்தில்
சாய்ந்தவாறே
பாடுகிறாள்
பூங்குழலி...
"அலைகடலும்
ஓய்ந்திருக்க
அகக் கடல்தான்
பொங்குவதேன்?.."-
ஆண் பெண் நட்பு
அழகானதுதான்...
அதிலும் முகமறியாது
உணர்வுகளினால் ஒன்றிப் போய்
புரிதல் நிறைந்த
ஆண் பெண் நட்போ அபூர்வமானது...
எத்தனை கஷ்டம் வந்தாலும்
பகிர்ந்து கொள்ளவும்
ஆறுதல் அளிக்கவும்
எப்பொழுதும் நானிருப்பேன்
என்ற நம்பிக்கையை
விதைக்கும் நட்பினைத்தவிர
வேறென்ன பெரிதாக
இருந்துவிடப் போகின்றது...!-
அவள் பாட்டு
அவளின் சோகம்
அவள் பிடிவாதம்
அவள் அழகு
அவள் ரகசியம்
அவள் வார்த்தை ஜாலம்
அவள் கற்பனா சக்தி
அவள் வலிமை
அவள் வீரம்
அவள் அறிவு
சோழர் காலத்து புதுமை பெண் அவள்
அவளே சமுத்திர குமாரி பூங்குழலி !
-