I had a dream
wherein I was a pirate
looking for some treasure.
It was something rare.
Very rare.
Rummaging through a million faces,
I couldn't find what I was looking for.
The rare and the rarest of treasures.
I was searching into faces;
alluring sculptured faces for traces.
Nope.
No one had it.
No one had your smile.
That heart winning smile
like a flower popping up with no cue
and shredding down with no clue.
I found it nowhere.
I had to stop dreaming
to find my treasure for real.
Sometimes, dreams fail
to override the beautiful reality.-
காயத்ரி தமிழன்
.
எழுத்தாணி முனையில்
எழுந்த என்
எண்ணங்களை பதித்த பதிவுகள்...
👇... read more
என் விரல்களை இறுக பற்றிக் கொள்
என்ன வேண்டுமோ பிதற்று- சொல்
விளங்கா மொழியில் பேசிடு!
துலங்காவிடிலும் மயங்கி விடுகிறேன்!
சிரிப்பினை சிந்தி சிலிர்க்க வை!
கண்ணிமை திறவாமலே கவர செய்!
அழுதேனும் உரையாடல் புரி!
அழகு அதுவும் என்பது அறி!
உவமைகளை மட்டுமே
உறவாட துடிப்பவர்களை
கண்ணசைவில் களவாடிடு!
பண்ணிசைக்கட்டும் - என்
கண்ணான கண்ணே, உன்
பொன்னான விழிகளை!-
ஒரே நேரத்தில்
ஓராயிரம் விளக்கேற்றி
ஒரு உலக சாதனையாம்..
கதிரோன், சாதனை புத்தகத்தில்
தன் பெயரை இணைத்துக்கொள்ள
விருப்பமின்றி தொலைவில்
சிரித்தபடி..-
குழைத்த வண்ணங்களில்
குழைந்துக் கொண்டு வந்த
ஓவியம் ஒன்று அதன்
ஓவியரைக் காட்டுமென்கையில்,
அடவுகளிலும் அபிநயங்களிலும்
தன்னை நெறித்துக்கொண்டு
வந்து நிற்கும் நடனக்கலையில்
அந்தக் கலைஞர் வந்தாடுவாரென்கையில்,
வார்த்தைகளைக் கோர்த்து
கவிமாலை தொடுத்த
கவிஞனின் கவி அவன்
மனதைப் பறைசாற்றுமென்கையில்,
தெரிந்துதான் விடுகிறது
படைப்பாளன் அவன் படைப்போடு
பிண்ணிக்கொண்டு விடுகிறான்,
பிரித்துப் பார்ப்பது அபத்தம் என்று.-
எனக்காகவே ஓர் இடம் சமைத்து
எவர் கண்ணும் எட்டிவிடதபடி
எச்சரிக்கையாய் கதவையும்
எல்லா சன்னல்களையும்
பூட்டி, தாளிட்டுக் கொண்டேன்.
அடைபட்ட கதவில் மோதியும்
சன்னல் கண்ணாடியில்
அடித்துக்கொண்டும்
தோற்றுப்போகுமென
நான் நினைத்திருந்த
கீற்றோளி ஒன்று
சாவி துவாரம் வழியே
சரிந்து வந்து என் மடி சாய்ந்தது.
நிற்க, நான் அடைத்திருந்தது
மரக்கதவையல்ல.
மனக்கதவை...-
அண்ணாந்து வானம்
பார்க்கையில் எல்லாம், அந்த
பிரம்மாண்டத்தின் பிரமிப்பில்
சிறுத்துப் போய்விடுகிறேன்.
என் போராட்டங்களோ
அதன் முடிவுகளோ
நினைவிருப்பதில்லை.
என் அடையாளங்கள் தேய்ந்துப்போய்
நான் யாரென்பதே மறந்துவிடுகிறது.
பிரபஞ்ச மூலையில்
மணற்துகளினும் சிறிய நான்
எனதேயெனதென பிடித்து
வைத்துக் கொண்டவையெல்லாம்
பறந்துவிடுவதாய் தோன்றுகிறது.
அப்படித்தான், நான் யாரென்று மறந்து
என் நிலையறிந்துக் கொள்கிறேன்.-
சிலசமயங்களில்
இரவு கவிந்த இருள்
விடிந்தும் விலகுவதில்லை.
பரிட்சயமற்ற பாரமாய் அது
பரிணமிக்கும் போது
பழைய விடியலின்
வாசல் அடைபட்டுவிடுகிறது.
வெளிச்சமற்ற இருண்ட
அச்சமயங்களில் தான் வாழ்வின்
ஆழமான அர்த்தங்கள்
கோரமுகத்தோடு
உண்மைகளை நிரம்ப
பூசிக்கொண்டு வருகின்றன.
நிறைய சாமானியர்கள்
ஒடிந்துவிடுவது இப்போதுதான்.
ஞானிகள் உயிர்த்தெழுவதும்
இவ்வேளைகளில் தான்.-
பௌர்ணமி இரவு.
பகைவனின் பிரதிப்போல்
அப்படி ஜுவாலை
விட்டுக்கொண்டிருந்தது நிலவு.
ஊரடங்கியப் பின்னும்
உறங்காமல் நீயும் நானும்.
நம் பேச்சலைவரிசையை
பேரேக்கத்துடன் தூரத்தில்
கேட்டு நிற்கும் அந்த நிலவுக்கு
உன்னைப் பிடிப்பதே இல்லை.
உன்னைப் பாட துவங்கியதிலிருந்து
தன்னைப் பாடுவதில்லையென்ற ஏக்கம்.
"என்ன அழகுல்ல அந்த நிலா,"
என்கிறாய் நீ.-
பரவலாக விட்டெறிந்தாற்போல்
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
சிதறிக்கிடந்தன நட்சத்திர மணிகள்.
கீழ் வானில் சிவப்பாக
நட்சத்திரம் போலவே
மின்னிக் கொண்டிருந்தது
செல்போன் கோபுரத்தின் விளக்கு.-
எனக்குப் பெரிதாக
ஒன்றும் ஆசைகளில்லை.
மனித வசிப்புகளிலிருந்து
சற்று விலகிக் கொண்ட, ஒரு
மலைத் தொடரின் அடிவாரத்தில்
கிளைத்துப் பெருகிய சிறு
மரக்கூட்டத்தின் ஊடே
எனக்கே எனக்கென ஒரு வீடு.
அவ்வளவு தான்.
புழுதி குடித்த வீட்டினுள்ளே
புத்தகங்களுக்கென ஓர் அறை.
அத்தி பூத்தாற் போல்
அங்கு மனிதன் பூத்தால் போதும்.
மற்றபடி புத்தகங்களும்
மரத்தின் உறவுக்காரர்களும் போதுமெனக்கு.
ஆம்... எனக்குப் பெரிதாக
ஒன்றும் ஆசைகளில்லை...-