நான் எழுதிய கவிதைகளில்... வரிகளின் அச்சாணியவன் ...
உறவிற்கு பிரிவு உண்டு
நினைத்து எழுதிய படைப்பிற்கு ???— % &-
இருக்கி பிடித்து இருக்க வேண்டிய கண்ணாடி ...
தவறுதலாய் கீழே விழ ...
சுதாரித்து பற்றிக்கொண்டியிருந்தால் உன் அழகை அதன் வழியில் ரசித்துயிருப்பாய்
மௌனமாய் கீழே விழுவதை வேடிக்கை பார்த்ததால் ...
உன்னை குத்தி கிழிக்கும் ஆயுதமாய் இன்று உன் முன்னே விஸ்வரூபம் எடுத்திருக்கிறது !!!-
I trusted again !
I trusted they will not leave me this time when I needed them the most .
I lost again !
All I should do is not take an oath to not trust again . I should rather take an oath to never forgive them ever !!!
-
அழகு ஆயூத மானது நந்தினி யாலே
அறிவு அழகானது குந்தவை யாலே
காதல் வீரமானது வானதி யாலே
வீரம் திமிரானது சமுத்திர குமாரி யாலே
பல போர் கண்ட பழுவேட்டரையரும் ,கரிகாலனும் வீழ்ந்தது நந்தினி யாலே ...
நித்தமும் சரித்திரம் பேசும் வந்தியதேவனின் வீரம் வெளிவந்தது குந்தவை யாலே ...
பலர் போற்றும் வீரனாம் ராஜ ராஜ சோழன் ... அவன் உயிர் பிழைத்தது பூங்குழலி யாலே ...
இன்று ஒரு நாள் கொண்டாட்டத்தில் ...
பெண்ணின் அழகு , அறிவு , காதலால் மாறிய சோழர் குல சரித்திரம் ... சூத்திரமாய் பல பெண் பெருமை பேசி விட்டு சென்றதை மறந்தே போனோம் !!!
-
சுய மரியாதைக்காக போராடிய அவள் ...
திமிர் பிடித்தவள் என்ற பட்டம் பெற்று கொண்டாள் !!!
-
நல்ல அறிவுரையை தவிர்த்து ...
உனக்கு ஏற்றார் போல மாறி ...
தவறு ன்னு தெரிஞ்சும் ஏதும் சுட்டிக்காட்டாது ...
பொய்யா இருந்து தான் ஒரு நட்போ இல்ல அன்போ கிடைக்குதுனா ...
அதற்கு தூரம் நின்று , உண்மையா இருந்து விட்டு போயிறலாம் !!!
-
நல்ல உணவும்,உடுக்க துணியும்
இருக்க சுவர் வீடும் வேண்டி,
பணத்திற்காக ஓடினோம் அன்று !
தேவைகள் நிறைவேறியதும் ...
ஆசைகள் யாவும் நிறைவேற வேண்டுகிறோம் !
நிலை மாறா நிம்மதியை மறந்து நிலையற்ற சந்தோஷத்தை தேடி ஓடி அலைந்து முரண்பாடுகளின் முத்தாய்ப்பு மனிதனானோம் இன்று !!!
-
ஏழை கலைஞன் அவன் ...
உதவி வேண்டி நின்றான் ...
பணத்திற்காக அல்ல ...
அவன் கலைக்கு ஏற்ற அங்கீகாரமும் ...மனமார்ந்த பாராட்டும், நல்ல பல விமர்சனமும் வேண்டி !!!
-
காலங்கள் கடந்து போகும் ...
காயங்கள் மறைந்து விடும் ...
சந்தித்த துயரங்களோ அனுபவத்தின் நிழலில் தஞ்சம் புகுந்து கொள்ளும் !!!-