......தேனினுமினிய பூமகளே எந்தன்
சிந்தையிவ் மிளிறும் தாமரையே பெற்
றால் தான் பிள்ளையா...என்ற வரைவை
தான்டி மகளாக உன்னுடன் பயணித்து க் கொண்டிருக்கின்றேன்.அதே வாழ்த்தாக.....நூறு ஆண்டு வாழ வேண்டும் என்ற வாழ்வை வாழ வேண்டும் அன்னையின் மடியில் அன்பெனும் குடையில் ஆயிரம் காவி
யம் நீ..இனி வரும் பிறந்த நாளில் இத்தளத்தில் இருப்பேனோ இல்லியோ
இதுவே உனக்கு என் நிரந்தரமான
வாழ்த்துக்கள்...என் விழியில் அரும்பும்
நீர்துளி உன்னுடனான நேசத்தை சொல்லிடும்...நலமுடனும் வளமுடனும்
நூறாண்டு வாழ வேண்டும்...என்னுடைய
பிரார்த்தனைகள்....என்றும் அன்புடன்...-
அண்ணன் என்ற சொல்லிற்கு ஏங்கி தவிக்கும் இந்த தங்கைக்கு தொப்புள் கொடி உறவாக வந்து அடைக்கலம் தந்த பாச மலரே....
இனி வரும் காலம் எல்லாம் வசந்த காலமாகும்.....
உன் வாழ்க்கை பாதை பிரகாசமாக ஒளி பெறும்.....
வெற்றிக்கான பாதையில் ஓடிக்கொண்டே இரு...
கடந்து செல்லும் பாதையில் பல மலர் வனம் போன்ற சந்தோஷம் நிறைந்து இருக்கும்....
பல முட்செடிகள் போல துன்பங்கள் நிறைந்து இருக்கும்....
மலர் வனத்தினை கண்டு மயங்கி விடாதே.... முட்செடிகள் கண்டு கலங்கி விடாதே.....
மாயை நிறைந்த உலகம் இது.....
வாழ்க பல்லாண்டு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...🍫🎂🍫🍫🎉🎊
-
பிறப்பிற்கு இன்னொரு பிறப்பு வயது தான் ஒன்று
வாழ்வில் கிடைக்கட்டும் பல சான்று மணம்வீசும் மலர் தேரே மனதால்(கரத்தால்) வாழ்த்துகிறேன் நூறு வாழ வேண்டும் புகழ்பல
பெற்று வணங்குகிறேன் நானும் உன்னை நினைத்து
கவிதையும் காணலாகட்டும் காலமும் பதில் சொல்லட்டும் உன்பிறவியும் எனக்கு தேவையென்று வயதும் கடந்தோடும்
வாழ்த்துகளும் வந்து சேரும் வெற்றியும் உனை சூழட்டும்
🎂இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎂💐சர்ஷித்💐
மனம்மகிழ்ந்து வாழ்வில் பல உயரங்களை
கடந்திடவே முதல் வாழ்த்துக்கள்
பிறப்பில் பிறந்த புன்னகை
பிறந்த மேனியாகவே வலம் வரட்டும்
என்றும் இன்புற்று வாழவே வாழ்த்துக்கள்
💐🙏🏻💐GOD BLESSING TO ALL💐🙏🏻💐-
அந்த முண்டாசு கவிஞனுக்கு
தான் ஒரு பிறந்த நாள் வாழ்த்து
சொல்லி விடுவோமே...மறைந்தும்
வாழ்கிறாய் கவிஞனே...வீழ்வேன்
என்று நினைத்தாயோ....யென்று. 🙏🙏🙏-
விருதுநகரின் வீரரிவர்....
தமிழகம் காத்த ஒன்பதாண்டில்
பொற்காலமாக்கியவர்....
ஏழையரும் கல்வித் தேரேற
முன்னின்றவர்....
மகத்தான மதிய உணவுத்திட்டத்தினை
திறந்து வைத்தவர்.....
கிங்மேக்கராக தமிழகத்தில் கிரிவலம்
வந்தவர்....
வாழ்நாள் முழுதையும் சமூகத்திற்கே
அற்பணித்தவர்...
மக்களின் நிலையை முன்னேற்றி
தன் நிலையை இறுதிவரை முன்னேற்றாதவர்...
கதர் வேட்டிகளையும்,புனித புத்தகங்களையுமே அரசியல் வாழ்வில் சேர்த்து வைத்துக் கொண்ட
அரும்பெருஞ் சொத்துக்குண்டானவர்...
இவரின் பிறந்த நாளிது💥...-
கிட்டியதனைத்தையும் உனக்கென அளித்திட நான் இருக்கிறேன் உறுதுணையாக உன்னருகிலே....
எட்டியதும் எண்ணியதும் தாண்டி எட்டாததென்பதை
ஏறிபிடித்து பார் போற்றும் புகழடைந்து வாழ்வு
செழிக்க இறைவனை வேண்டுகிறேன்......
வெண்மேகங்களுக்கு இடையே வாழ்வெனில்
சுடும் பகலவனாகவும் கருமேகங்களுக்கு இடையே வாழ்வெனில் முழுமதி யாகவும் குன்றாது
ஒளிர்ந்திட உன் பிறந்த நாளில் வாழ்த்துகிறேன்....
"இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்"
-
தலையில் ஏற்றிய கவலைகளின் கனமும்
சோம்பலும் பறந்தோடுமே தினம் உம் முகமணுகி
உரையாடிடும் போது..... மணித்துளிகள் மெல்ல
நகர்வதும் தெரிவதில்லையே வகையாய் வகைப்படுத்தும் உம் வார்த்தைகளில்..........
உழைப்பின் வேர் பிடித்து உச்சம் தொட்டவர்
உடல் நலமோடும் மன மகிழ்வோடு நிறைந்த
வாழ்வு கண்டிட வேண்டிக் கொள்கிறேன்......
அளவில்லா அன்பை வெளிப்படுத்த என்
மீச்சிறு பிறந்த நாள் வாழ்த்தொன்றை அன்போடு
பகிர்ந்து கொள்கிறேன்........
-
அகவைகள் இரு பத்து ஆயினும்
அகலாமல் நீட்டிக்கிறேன்
நாள் ஒன்றில் அறிந்த பெண்குழந்தையாகவே....-