Karthika Ravi   (Karthika Ravisankar)
62 Followers · 34 Following

Joined 18 September 2020


Joined 18 September 2020
1 AUG AT 16:44

At times, stress is over ruling me,

Behind closed doors,
I'm mourning silently....
I didn't break down — but still...
My mind, drowning in quiet grief
My heart, grieves so deeply
for you because
Grief is also love,
It's still searching for you
to fall into once more.

-


8 OCT 2024 AT 10:02

என் உறக்கத்தை
பறித்துக் கொள்ளும்
புத்தகத்தில்
இடைச்செருகலாய்
உன்னோடான
பொழுதுகளை
சேமித்த வேளையில்
இமைகளின் இடையில்
கசிகிறது உவர்நீர்...

-


7 OCT 2024 AT 7:06

சொற்களற்ற
உரையாடலாகவும்
எழுத்துகளற்ற
கவிதை வரிகளாகவும்
வெற்றிடம் கொண்ட
உள்ளமாகவும்
சில நேரங்களில்
வாழ்கிறேன்...

-


28 AUG 2024 AT 7:45

தீராத நேரங்களில்
இரை வேண்டி காத்திருந்த
மனவெளிக்கு எழுத்துகளை
இரைத்து விழி நீரைப் பாய்ச்சி
பராமரித்த வேளைகளில்
கவிதைப் பூக்கள் பல
பூத்து குலுங்கியது.......
பறிக்கவியலா அப்பூக்களை
பூக்கச் செய்யும் சிந்தனையை
சில நாள்களாக எங்கோ
தொலைத்து விட்டேன் ...

-


13 JUL 2024 AT 21:43

காகிதத்திற்கு காய்ச்சலாம்
தென்றல் காற்றும் மெல்லிசையும்
பிரமிளின் புத்தகமும்
என்றிருக்கும் என்னை
வந்து அழைக்கிறது
இந்த பேனா .....காய்ச்சலுற்ற
தன் தோழனுக்கு துணை நிற்க
மை நிரப்பி என்னை அழைத்துச் செல்வாயா என்ற ஏக்கத்தோடு.....

-


10 JUL 2024 AT 22:17

பரிட்சயம் இல்லாதவர்களையும்
ஈர்த்து அதன் உணர்வுகளில்
சிறை வைக்கும் படியான
வரிகளமைப்பவர்கள் நிச்சயம்
தமிழ்த் தேனை சுவைத்து
திளைத்தவர்களாகவே இருப்பார்கள்....

-


6 JUN 2024 AT 6:10

தமிழ் கூறும்
சிறு பொழுதுகள்
அத்துனையிலும் என்
அன்பின் மொத்தத்தையும்
வாரிக்கொண்டவனிவனை
பற்றிய கனவுகளும்
எதிர்பார்புகளுமே
நிறைந்திருக்கிறது ......
இந்த பெருவாழ்வின்
நாள்கள் ஒவ்வொன்றிலும்
செல்வ வளமும் நீங்கா நலமும்
பெற்று வாழ்ந்திட வாழ்த்துகிறேன்....
இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள் மகனே.......💐💐

-


9 MAY 2024 AT 19:54

இனிப்பையும் கசப்பாய் ருசித்த
நாள்கள் கொண்ட எல்லையின்
தொடக்கம் கசப்பையும் இனிப்பாய்
ருசிக்க வைக்கிறதிந்த வாழ்க்கை.

-


8 MAY 2024 AT 17:47


The two most important
decisions of my life
.
.
I don't want to be in trend
I don't need anything in the trend
cause my vision is always intact.....
I Ain't obsessed with sophistication.

-


7 MAY 2024 AT 21:37

தாளில் எழுத்துக்களை இறைக்க
எண்ணத்திலேதும் அழுந்தப்படவில்லை
சில நாள்களாக ....... அன்பின்
வெளிப்பாடாக கை சேர்ந்த கவி புத்தகத்தை வாசித்த போது........
தமிழை சுவைக்காது
வறண்ட இருந்த மனப்பரப்பில் சிறு தூறல் வந்து விழுந்திட.... சில கணங்கள் வசந்த காலமாய் மாறிப் போனதே ......

-


Fetching Karthika Ravi Quotes