மீசையில்லா பாரதியும்
இங்குண்டு!!!!!
(Caption)
-
சீதையடி நீ யெனக்கு, இராமனடி நானுனக்கு;
தேவதையடி நீ யெனக்கு, தேவனடி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே,என்னுடன் சேர்ந்திடடி
எண்ணி எண்ணி பார்ப்பதிலே, கோடி இன்பமே!கண்ணம்மா-
முண்டாசு கவிஞனே-நின்
முறுக்கு மீசையில் தமிழ் வீரம் தெறித்தவனே...
முத்தமிழை முத்தமிட்டு
முகவரி யாக்கியவனே-நின்
மூச்சுக்காற்றின் அனல் தெறிக்காமல்
முழுபிறை தமிழும் தேய்கிறதே...!!
முட்புதருக்குள் சிக்கிக் கொண்ட
மானிடர்களை நின் கவி முரசறைந்து
மீட்டிடாயோ...!!
மீண்டுமோர் அடிமைப்புரட்சியை
அடியோடு அழித்திட நின்
முதற்கவி அளிப்பாயோ...!!
மறுபடியும் பிறப்பெடுப்பாயோ
எம் தமிழ் தகப்பனே...!!-
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
உலகழிக்கச் சொன்னாயே பாரதி!
இங்கே வறியோர்க்கு வாழ்வேயில்லாதபோது
எத்தனை உலகங்களை அழிப்பது?-
தமிழுக்கு ஒரு கவிதை
என் தாய் மொழியாம் உயிருக்கு
ஒரு கவிதை
எம் பாரதி வித்திட்ட செந்தமிழுக்கு
ஒரு கவிதை
தெறிக்கவிடும் தமிழே கவிதை
♥️♥️♥️♥️
-
நூறு ஆண்டுகள் தமிழின்றி.
வெறும் முப்பத்தி எட்டே ஆண்டுகள் தமிழோடு.
விதியளித்த இரண்டு வாய்ப்புகளில் இரண்டாவது வாய்ப்பையே தேர்ந்தெடுத்தான் அந்த முறுக்கு மீசையான்....!!
என்றென்றும் பாரதி..!!-
"பாரதிக்கோர் பா"
இருளினைக் கவளமாய்க் கவனமாய் விழுங்கும்
கதிரவனாய்க் கனன்றெ ரிந்திடும் கண்களையா?
அனலிரைக்கும் அக்கினிக் குஞ்சகளாய் அரிமதியவன்,
இதழ் இறைத்திட்டத் தீந்தமிழ் வார்த்தைகளையா?
எளியேன் எதைப் பாடுவேன் என்னெஞ்சே??
அரலைக்கும் ஆயிரம் அடலார்தமை விரட்டிடும்
மறமதை மனமதில் வைத்திடும் வீறுநடையையா?
விசையேற்றி வீழ்த்திடத் துடித்திடும் அம்புகளாய்
விடுதலை வேட்பனவன் விதைத்திட்ட வேட்கையையா?
எளியேன் எதைப் பாடுவேன் என்னெஞ்சே??
பெண்மையின் திண்மையை எம்மைக்கும் உணர்த்திட்ட
வஞ்சிக்கோ; முண்டாசு மன்னன்; மீசைக்கவிஞனவன்;
என்போல் ஏனையோருக்கும், எந்தாய் தமிழ்தன்
தாக்கத்தைத் தந்திட்ட தமிழ்த்தாயின் தலைமகன்.
பாவதில் பதிந்திட வார்த்தைக்கு வழியில்லை;
வண்டமிழ் வளனவன் வாழ்வுதம் வண்ணச்சுடரதை.
பார்பாடும் பைந்தமிழ் தந்திட்ட தமிழ்க்கிழான்;
பாப்பித்தன் அவன்பேர் பாரதி என்பார்...-
#500
எனக்கென
ஒரு உலகம்
நான் மட்டுமே
அதில்....
நான் கண்டேன்
கவி உலகம்
நீ வாழ்தாய்
அதில்....
உன் சாயல்
இல்லா
கவி இங்கு
உண்டோ....
இந்தக் கவிக்கடலின்
ஒரு சிறுத்துளியாய்,
உனை
வணங்குகின்றேன்...-
அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
உன் பாடலை தவறாக
புரிந்து கொண்டனர் பாரதி....
காட்டினை அழித்து...
இயற்கையை எரித்தனர்..-