பிழைத்தலை விட்டு
இன்றைக்காவது
வாழ்ந்து விட வேண்டும்;
எத்தணிப்பில் தொடங்கி
ஏக்கத்தில் முடிகிறது;
அத்தனை நாட்களும்..!
ஏனோ பிழைப்புக்கு
அத்தனை நேரமிருந்தும்
வாழ்ந்திட மட்டும்
நேரமே யில்லை..! ❤️
-
Tamizhan💪💪
Music lover...🎼🎻(Yuvan/ARR)
Foodie..🍕🌭
Committed with bo... read more
ஆயிரமாம் பிழைகள் - அதை
அடிச்சுவடின்றி அழித்தெறியும்
காகிதமாம் பணக்குப்பைகள்..!
அறத்தின் அகரமா?
தன் ஒழுக்கமா? - அது
யாதெனக் கேட்பார்.
பணம் வந்து சேர்ந்திட
அறத்தின் நாயகர்களாகிடுவார்..!
உபதேசம் பலவும்
ஊருக்கும் உதித்திடுவார்..!
நாலடியாரும் நான்மணிக்கடிகையும்
நலிந்திட்ட இந்நிலத்தில் - என்னைத்
தன்னந்தனியே இரங்கவிட்டு
வான்புகழ் கொண்ட வள்ளுவா
நீ மட்டும் நிலம் விட்டு
கடலுக்குள் புகுந்து விட்டாய்..!-
வாழ்க்கை முற்றிலும்
மாறிப் போயிருக்கும்..
எந்தன் எச்சங்கள்
முழுவதுமாய் உங்களிடமிருந்து
துடைத்தெறியப் பட்டிருக்கும்.
என்றாலும் ஏதோ ஓர்
அழைப்பின் குரலிலேயோ,
பெயரின் அழைப்பிலேயோ
எண்ணங்களின் அலைவரிசையில்
அழையா விருந்தாளியாக
இவன் முகம் தோன்றும்போது
நிச்சயம் உங்கள் உதடுகளில்
சிறு புன்னகை தவழும்..!
நொடியில், அந்த புன்னகையில்
இவன் வாழ்வு அர்த்தமேற்றிருக்கும்..!-
கந்தல் ஆடை; கழுவாத முகம்;
குப்பென்று முகம் சுளிக்க வைக்கும்
வியர்வை ஊறிய வாடை;
கிழிந்த போர்வை வீடாக,
வானமே கூரையாகிப் போக;
அன்று கிடைத்த பழைய சப்பாத்தியை
அவளுக்கு அவன் ஊட்டிக் திளைக்கிறான்.
கறையேறிய பற்கள் தெரிய சிரித்திருந்த,
அந்த பிச்சைக்காரச் சூரியனின் வீச்சில்
நிலவாய் அவள் முகம் ஒளிவீசி நிற்கிறது.
அன்பின் கதகதப்பில் அங்கே
உறைய வைக்கும் குளிருங் கூட
மொத்தமாய் கரைந்துதான் போகிறது.
காதல் யாரையும் பின்தொடர அனுமதிப்பதில்லை;
இங்கே காதல்தான் அவர்களைப் பின்தொடர்கிறது.
நிச்சயம் பிச்சைக்கார்கள் இல்லை; ஆம்
அன்பின் தேசத்தில் அவர்கள் பணக்காரர்கள்..!
-
எங்கோ தோன்றிய
ஒற்றை மழைத்துளி
என்ன செய்திட முடியும்?
உச்சந்தலை நனைத்து
உள்ளங்கால் தொடுகையில்
வாழ்க்கையின் வேர்களை
உயிர்ப்பித்து உலாவர முடியும் - ஆம்
இழந்து மறந்த ஈரங்களை
அழகாக்கி அன்பளிக்க முடியும்.
ஏற்றல் புதிது - அந்த
மழைத்துளி சிலநேரம்
மனிதர்களாகவும் இருக்கலாம்..!
-
தொடாமல் தொட்டுத் தொடரும்
கொண்டல் காற்றும் - ஒருநாள்
தென்றலாய் மாறி, இங்கே
விடாமல் பட்டுப் படரும்..!
ஆம்! அந்த சன்னல்
சற்று திறந்தே இருக்கட்டும்..!
-
வெறித் திருந்த பார்வையின் முடிவில்
ஓர் வெறுமையின் தேசமாய் வானம்;
காரணமின்றிக் கனத் திருந்த மனதில்
எழுத்துகளின்றிப் பிறந்திருந்த புத்தகத்தின் வாசனை.
எங்கோ ஒரு மூலையில் இருப்பது
தெரியாமல் ஒளிர்விடும் துருவ வான்மீன்,
நாளை பிறக்கப் போகும் விடியலின்
முன்பணமாய் நம்பிக்கை இலச்சினை ஆகிறது.
எப்படியும் விடியத்தான் போகிறது!!
நடந்தவைகளை எல்லாம் நொடியில் மறந்து - நானும்
யுகத்தின் வேகத்தில் கரையத்தான் போகிறேன்.
கரைதலில் அம்மாவின் முறுவலுக்கான காரணமும்,
அப்பாவுக்கான ஆறுதலும் இருக்கத்தான் போகிறது..!
என்றாலும்
வாழ்க்கை அவ்வளவு ஆழமாய்க் கத்தியை
இறக்கி இருக்க வேண்டிய தில்லை..!
-
Wake up with different feelings Everyday??
Best 4 solutions are here...
1.Never get too attached with people.
2.Wakeup for your dream.
3.Understand a value of the single day in your life.
4. Think about your ordinary life and pledge yourself to make that extraordinary.-
தூக்கிப் பிடித்த
தூரதேசக் கனவுகள்
துரத்தித் திரிய;
தாங்கித் தணித்த
எந்தை தோள்கள்
ஏங்கித் தவிக்க;
களைந்து கரைந்த
காதல் கணங்களின்
கார்நிற புழுதிதனில்,
மையல் மனமட்டும்
தாபங்கள் தந்திட்ட
தாகங்களால் விழித்திருக்க;
இமைக ளிறுக்கி
அங்கங்க ளடக்கி
உறங்கப் போகிறேன்; -ஆம்,
உறங்கித்தான் போகிறேன்..
உன்மத்தமேற்று உறங்கா
உணர்வுகளின் உயிர்ப்பினூடே...-