ஒரே நிறத்துணி
ஒருசேர ஒய்யாரமாக
நீண்டு நெடுந்தூரமாய் நின்று,
வியர்க்க விறுவிறுக்க
அங்கொன்றும் இங்கொன்றுமாக
ராகம் பிசுற,
பாடிய தமிழ்த்தாய் வாழ்த்தை
இன்றும் நினைத்தால்
தணியவில்லை...
பள்ளியின் தாகம் !
-
8 SEP 2021 AT 20:16
9 SEP 2018 AT 10:43
பாடையொன்று தோள்தாங்கி
தன் கல்லறைக்கு செல்கிறது உயிர் பிணமொன்று
கல்லறையின் பெயர் பள்ளிக்கூடம்.-
14 MAR AT 0:07
விடுமுறை நாளில்...
குழந்தைகள் செய்யும்
அத்துனை....
அழிச்சாட்டியங்களுக்கும்,
பாவமந்த...
பள்ளிக்கூடமே
திட்டு வாங்கிகொள்கிறது!
என்ன நான் சொல்றது...
-இராதாஇராகவன்.-
12 JAN 2022 AT 13:11
வண்ண வண்ண வண்ணத்துப்பூச்சிகள்
பறந்த இன்னாங்கு
சுவற்றுக்குள்..
வண்ணங்களை சுமந்து
கொண்டு வட்டமிடுகிறது..
இவ்வண்ணத்துப்பூச்சி..-
1 SEP 2021 AT 11:54
இருவருடங்களாய் காத்திருந்த மொட்டுகளோ..
மீண்டும் நம்பிக்கை உயிர்தந்து வாசமிகு
வண்ண மலர்களாய் பூத்துக்
குலுங்கியது இன்று..
#பள்ளிகள் திறப்பு
-