Some bonds are like sea
Sometimes I get amused by the waves
And sometimes I wonder of its depth...-
Is there anything scarier than death?
Maybe a wounded heart with an overthinking mind...-
உன் நீள் மௌனத்திற்கே
மழைக்கால
ஜன்னலோர கவிதையின் சுவையென்றால்......
போதும்....
இனி கதகதப்பாய் தேநீர் எதற்கு
நீ பேசவே வேண்டாம்-
And yes
She's gentle enough to puff a breeze
And strong enough to gust out a storm-
Magics aim at hiding a truth
Also about making up a new truth at times...-
மின்னலாய் மறையும் அந்த
மின்மினியைப் பிடிப்பதா இல்லை
கடித்துவிட்டு காற்றில் மிதக்குமந்த
கொசுவைப் பிடிப்பதா என்று விழிக்கும்
சிறுவனைப் போன்றவர்கள்
காதல்வயப்பட்டவர்கள்...-
மழையில் மலர்ந்த மலருக்கென்ன மனக்கவலை
அதே மழையில் அடித்துச்செல்லப்பட்ட குருவிக்கூட்டை பற்றியா?
இல்லை இல்லை...
காணாமல் போன குருவியைப் பற்றி மட்டும் தான்....-
தாளிப்பு சத்தம் ஒவ்வொன்றும் ஒரு சங்கதி
ஒவ்வொரு விசிலும் ஒரு ஆலாபனை
சமயலறையும் அவளுக்கொரு
சங்கீத கான சபா தான்....-
இரவுக்கெல்லாம் நீல வானம்
நிலவுக்கெல்லாம் இளஞ்சிவப்பு வர்ணம்...
இந்த காதலில் இனி பனி இரவெல்லாம் பட்டப்பகல்...
-