பெண்மை படைத்தான்
பிரம்மன்!!!
பிழை திருத்தி...
அன்னை படைத்தாள்
பிள்ளைநிலா!!!
📝ஜீவி தமிழ்😍...-
இரைப்பையில் மிச்சம் வைத்த
பறவையின் எச்சமாக
வெளித்தள்ளப்பட்ட சிதைவு நான்...
எதிர்காலத்தில் எந்நொடியிலும்
வேரோடு பிடுங்கி எறியப்படலாம்
இந்நொடி முட்டிமோதி முளைக்கத்
தயாராக உள்ளேன்...
என் எமன் யாரென அறியேன்...
என் படைப்பின் பிரம்மன் நானே...!!!
-
அவரவர் படைப்புக்கு அவரே சொந்தகாரர் , பறிமுதல் செய்த படைப்புகள் படைத்தவர்களுக்கே சொந்தமாகும்.
படைப்புகள் அழியலாம், மறைக்கபடலாம்,
படைப்பு மொத்தமும் அவர் உள்ளே... படைப்புகள் ஏராளம் படைப்பாளி ஒருவரே-
தொடர் பின்னூட்டங்களும் விமர்சனங்களோ எதிர்ப்போ இல்லாத கருத்தூட்டங்களும் எதை வளர்க்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.
உளவியல் ரீதியாக ஒரு எழுத்தாளரை அது மக்கவே செய்யும், ஒரு வட்டத்துக்குள் சுற்றவிடும், அங்கேயே கலை முடிந்துவிடுகிறது, அதிலிருந்து அப்படைப்பாளி மீள்வது பெரும் சவாலாகின்றது.
சதா காதலியம் கண்ணீர்கடல் பெண்ணியம்
என தொடர்ச்சியாக ஒன்றையே எழுதும் படைப்பாளிகளின் பதிவுகள் ஒரு கட்டத்திற்கு மேல் வெறும் பதிவாக அமைவதற்கு காரணம் யாதென்று தேடினால் அங்கே பெரிதளவிலான தாக்கம் தங்களின் மேலோட்டமான வாசிப்பும்
நட்பிற்கான பின்னூட்டமுமென்பது பிழையாகாதோ ?
ஊக்குவித்தலென்பது உணர்வுப்பூர்வமாக இருத்தலே தகும்...!-
காதல்
உன்னை தாங்க ஏங்குபவர்களை
தவிர்க்கிறாய்
உன்னை வெறுத்து தவிர்ப்பவர்களுக்காக
ஏங்குகிறாய்
நீ என்ன படைப்போ
-
மனிதன் உருவாக்கிய
விதையில்லா பப்பாளி
விதையில்லா தர்பூசணி
விதையில்லா திராட்சையைப்போல
விந்தணுவில்லாத ஆண்
கருப்பையில்லாத பெண்ணை
கடவுள் படைக்க நினைத்தால் ?-
அழகு அதிகமென
அரைகுறையாய் மண்ணிற்கு
அனுப்பி வைக்கப்பட்ட
ப்ரம்மனின் படைப்பு நீ..,
-
ஆசை துறந்த ஞானியானவன்,
தேன் சிந்தும்; உன் இதழ்களால்,
மீசை முளைத்த; தேனீயாகிறேன்...!-