subash veerasubash   (அபூர்வன் சுபாஷ்...♥️)
25 Followers · 6 Following

Joined 27 November 2018


Joined 27 November 2018
6 AUG 2020 AT 18:18







-


29 JUL 2020 AT 13:28

கடைத்தெருவுக்கு
கிளம்பிய அப்பாவிடம்,
பேட்மிண்டன் பேட்டுக்காக;
பூஸ்ட் கேட்டான்
மூத்தவன்,
காபி கப்புக்காக;
ஆர்லிக்ஸ் கேட்டாள்
இளையவள்,
ஆர்லிக்சோ...? பூஸ்ட்டோ...?
எதுவாயினும் சரி,
காப்பி தூள் கொட்டிவைக்க
டப்பா கிடைத்தது;
எண்ணிக்கொண்டாள் தாய்
அடுக்கலையிருந்து...💚

-


3 MAY 2020 AT 16:03

நிறைய ஆசைகளோடு,
நிராசைகள் பல;
நிறைந்தது வாழ்வு...!

-


31 MAR 2020 AT 11:39

தித்திப்பே...!

நீ தந்த புத்தகத்தின்;
ஓரங்களெல்லாம் எறும்புகள்,
இதழ் தீர்த்தம்
தொ(இ)ட்டு;
திருப்பினாயோ பக்கங்களை...?😍

-


25 MAR 2020 AT 13:50

நீ சிறியவளாய் இருக்கிறாயென,
விமர்சித்தார்கள்.
ஹைக்கூ கவிதைக்கு;
வரையறை தெரியாதவர்கள்...🥰

#ஹைக்கூ பெண்ணே...!

-


6 MAR 2020 AT 18:40

உன்னை
நினைக்கலாம்;
என நினைக்கையில்,
உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்; என்பதை,
மறந்து விடுகிறேன்...!!!

-


18 JAN 2020 AT 17:56

எதற்கு நிற்கிறோம் என்றுணரா;
போக்குவரத்துக் காவலர்,
எதற்கு நிற்கிறோம் என்றறியா;
சிக்னல் கம்பங்கள்,
இவைகளினூடே,
எதற்கும் நிற்காமல் செல்கிறான்;
எந்திரமாகிப் போன,
தந்திர மனிதன்;
தாறுமாறாய்...!

-


12 JAN 2020 AT 13:56

விரல் உறிஞ்சி தூங்கும்
குழந்தையாய்,
உன் இதழ் உறிஞ்சி தூங்கிடவா...!

-


11 JAN 2020 AT 18:57

உனை தீண்டும் காற்று;
கடவுளிடம் வரம் வாங்கியிருக்கக்கூடும்...!

-


1 DEC 2019 AT 13:42

மழையே பிடிக்காது என்றவன்,
மழையில் நனைந்து கொண்டிருக்கிறான்;
கல்லறையில்...!

-


Fetching subash veerasubash Quotes