சுதந்திர பறவை ஒன்று கூண்டில் கவி பாடியது ;
அமைதியான நாடு என்றது ஆளும் கட்சி;
வீதியில் விதி மீறிய மக்கள் கூட்டம்;
பக்கத்து வீட்டில் பிரச்சினை;
பக்கத்து நாட்டில் பிரச்சினை;
உதவி கேட்க பல தேசம் நடக்கிறோம்;
காந்தி தேசமே விடுதலை யாரிடம் இருந்து சுதந்திரம் அடைந்தோம்.
எப்போது தனியும் இந்த சுதந்திர தாகம்;
மனதில் தொட்டு
சொல்லுங்க இன்று
சுதந்திர நாள் வாழ்த்துகள் 👑
ஜெய் ஹிந்த்;வந்தே மாதரம்-
வண்ணம் பூசிய
கன்னத்தில் ஒரு சின்னம்
வரைந்திட வா;
இந்த எண்ணம்
எங்கே தோன்றியது
உன்
நெஞ்சில்
சாய்ந்திடவா.-
என்னை புரிந்திருந்தும் விலகி நடந்த என் நிழலுக்கு என்ன கோபமோ என் மீது.
-
அந்த நாலு பாவம் செஞ்ச நாலாவது வீட்டுக்காரன் தெரியாமல் தன் வீட்டின் மாடியில் இரவு லைட்டை அணைத்து வைக்க மறந்து விட்டான்;
அது தூரத்தில் இரை தேடும் நாய்க்கு உதவியாகிறது.-
நான் யார் என்ற கேள்விக்கு காலம் பதில் சொல்லும் .
(இதை எழுதியவர் யார் என்று தெரியவில்லை எம்ஜிஆர் குரலில் கேட்ட வசனம் ) தற்போது மனிதர்களின் அகத்தின் குரல் இதுவே .-
தேடி வந்து அன்பை வழங்கும் நல்ல மனிதர்;
இதை போல மனிதர்கள் இருப்பது அரிது;
அவரின் பேசும் விதத்தில் அவர் வயதில் மட்டும் அல்ல வரிகளிலும் உயர்ந்தவர் என்று நினைக்கிறேன் ;
கவிதை என்பது ஒருவருக்கோ அல்லது குறிப்பிட்ட வயதில் வருவது மட்டும் அல்ல அதையும் அறிந்து கொண்டேன் இவரது வரிகளில்;
தாங்களும் தங்களை சார்ந்த வரும் நலம் வாழ வாழ்த்துகள் ஐயா💐🙏🏽😊
-