QUOTES ON #செவிலியர்

#செவிலியர் quotes

Trending | Latest

செவிலிதாய்

-


12 MAY 2021 AT 21:05

சேவையை செய்து தனது
தேவையை பூர்த்தி செய்யும்
இவள் இல்லையென்றால்
மருத்துவமனையும் நோயால்
முற்றுப்புள்ளி இல்லாமல்
முடங்கிக் கிடக்கும்

சேவையை தாயின் மகள்கள்
"செவிலியர்கள்"

-


19 MAY 2020 AT 1:20

குரோனாவின் இடையே கூடிய "குடி"மாக்கள்

-



மருந்து வாடை இருந்தும் கூட மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்க காத்திருந்து சேவை செய்யும் ஒவ்வொரு செவிலியருக்கும் என் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துக்கள். #World Nurse Day

-



முன்பின் அறிந்ததில்லை,

முகம் பார்த்து பேசியதில்லை,

சொந்தமும் இல்லை பந்தமும் இல்லை,

இருந்தும் என்னை அன்பாய் கவனிக்கிறாள்,,

"செவிலியர்"

-


3 MAR 2019 AT 13:30

என் தாய் என்னை தூக்கி ஆர தழுவுமுன்
எந்தன் ஸ்பரிசத்தை தீண்டியவள்
செவிலித்தாய்



ஏனோ அவ(ள்) முகம் அறியாத பேதையாய் போனேன்.....


-


11 MAY 2020 AT 21:29

செவிலியர் போற்றுவோம்!விருவிருப்பா இருந்த உலகமிப்போ
வீட்டுக்குள்ளேயே முடங்கி போக
அரசனுந்தான் ஆண்டியான அனைவருமே அரைவைத்தோடு தான் இருக்க வைரசும்தான்
வந்திடுமோனு தனித்திருக்க
வந்தவரின் உயிர் காக்க நீ விரைந்த !
கூண்டுக்குள்ளே அடங்கி ஊரேகிடக்க
குடும்பத்தையும் மறந்துட்டு தான் _ பிறர்
குலம் காக்க நீ வந்த!
கோரோனாவதான் விரட்டிடவே நீயோ
வியர்வையிலே தினம் குளிச்ச!
நீ பெத்தபிள்ளையோ அழுகையிலே
எட்டி நின்னே கண் துடைத்த!
கட்டியணைக்க முடியலையினு_நீயும்
கண்ணீர் விட்டு கதறி அழுத!
பக்கம் வந்தா பரவிடுமோனு பந்த பாசம் தள்ளிவைக்க
பக்கதிலேயே நீயும்நின்னு பக்குவமாக பாத்துகிட்ட
எமனோடு போராடி பல உயிரை நீ காக்க
நுண்ணுயிரியும் உனைத்தாக்கி_உன்
இன்னுயிரை நீ இழந்த!
கைத்தட்டி மலர்துவினாலும் - உனக்கோ
மயானத்தில் இடமில்லை!
இடைவெளி கடைபிடிக்கும் உலகில்_ நீயோ
இடைவிடாது உழைக்கிறாயே!
ஆயிரம் செவிலியர் நமை
பிரிந்தாலும்_உங்கள் சேவைக்கோ குறைவில்லையே!
நும் போராட்டத்தை தான் பாராட்ட
புதிய வார்த்தை பூக்கலையே!
நின் திருசேவை பறைசாற்ற
என் மெய்சிலிர்க்குமே!

-


11 MAY 2020 AT 19:25

நம்மை சேமிக்கத் தானோ செவிலியர் என்னும் பெரும் செல்வத்தை படைத்துள்ளார் கடவுள்...
ஓய்வின்றி உழைக்கும் அனைத்து தெய்வம் களுக்கும்🤝🏻
இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்.👏🏻👏🏻

-


12 MAY 2020 AT 20:35

செவிலியர்

இன்றைய நாட்களில் , நம் கண்களுக்கு தெரியும் கடவுளின் தூதர்கள் !..

சகிப்புத்தன்மையும் சேவையும் ஒன்றாக செய்யும் உன்னதமானவர்கள் !..

தாயும்,தாரமும் நம் பந்தனின் இணைப்பில் செய்யும் ,
கவனிப்பும் அக்கறையும் !

எந்த எதிர்பார்ப்புகள் இன்றி நமக்காக மருத்துவ சேவை செய்யும் வல்லவர்கள் !..

-


12 MAY 2020 AT 10:01

செவிலியர்!!
மருந்து வாடை இருந்தும் கூட மனிதர்களுக்கு மறுவாழ்வு அளிக்க காத்திருந்து, தன்னலமற்ற சேவைகள்! புரியும் என் வெண்ணிற தேவதைகளுக்கு!!
என் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்!

-