புதிதாயின் அதுவும் உனதாயின்
விதியாகும் எதுவும் இனிதாகும்
அரிதாயின் அதுவும் எளிதாயின்
விழிகாணும் எதுவும் அமுதாகும்
புதிதும் அரிதும் எளிதாய் உனதே
என்றே தினமும் சுழலும் ஞாலம்
பகலோன் முழுதும் பார்த்தே முடித்த
முன்னூற் றருபது நாட்களை கடந்தே
மீண்டும் புதிதாய் சுழலும் நாளில்
வேண்டும் வரமாய் நிழலும் சிரிக்கும்
நின்றன் வாழ்வில் நீங்கா நிஜமாய்
இன்பம் திகழ இயமத்திடை நின்றோனின்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🥳🥳-
Facebook: Dhamu mech
My tagline : சிந்தனை கிறுக்கல்கள்
தமிழ் ஆழியி... read more
நிலவொளியில் நினைகையில் கடக்கின்ற மேகம் போல்
நடக்கின்ற நாடகம் தான் நீ இல்லாத நிசப்தமென
கலைகின்ற வேளைக்கு காத்திருந்த கண்கள்
மேகங்கள் விலகியும்
சோகங்கள் விலகாமல் நீரினில் ஊறிய
பஞ்சு போல் கனப்பதேனோ-
உயிரியம் பிரித்த உயரிய உயர்திணை
உயிரதை காத்து உதவிட உறைத்ததை
உருளையில் நிறைத்திட தவறிய பெயரால்
உறவினர் உயிர் பிரியும் துயரினை
உணர்வென உள்ளம் உடன்கட்டை ஏறிட
உரியவோர் உத்தியோகத்தினர் வறியவருயிர்
உதிர்வதை நிறுத்திட உடனடி தீர்வென
உதித்திடும் விடியல் வேண்டும் உறங்கா இமைகள்!!-
எள்ளி நகையாடும் சொல்லில் புன்னகைப் பாடும்
நகைச்சுவை கலைஞர்கள் மத்தியில் தனிச் சுவையுடன் கனிச்சொற்கள் கொண்டு கருத்தூசி போடும்
சின்னக் கலைவாணர் மண்ணுள்ளே விதையாக
தன்னையும் வித்திட்டதேனோ!
கோடி விதைகள் மரமாக மாற உரமாக
உன்னையும் உயிர்மாய்த்ததேனோ!
சிரிக்க வைப்பது தானே உன் பழக்கம்
வழக்கத்திற்கு மாறாக ஏனிந்த கண்ணீர் முழக்கம்!!-
மெய்ப் பொருள் உள்ளே மெய்ப் பொருளாய் உள்ள
விடை பெறாத வினா விடை பெறாது
கண்களுக்குள் அகப்பட்டதின்று! கண்களில் அகப்படாத ஒன்று;
பற்றிக்கொண்டது என்று! பற்றிக் கொண்டதென்று?
தனித்திறன் கொண்டு தனித்திருக்கச் செய்து
வெற்றிக் கொண்டு ஆட வெட்டிக் கொன்ற ஆடாய்
வேர் வெந்த நீர் குடித்திருக்க
வேரோடு வந்த நீர் குடியிறக்க
சாட்சி இல்லை என்பது, சாட்சி அல்ல இல்லை என்பதற்கு!
சாட்சியுடன் ஆட்சி கலைக்க இக்கலைதான் சாட்சி!!
கலைத் தமிழ் 🤗🤗-
உயிரருக்க உலவும் நோயிடையே
பயிருக்கும் உழவர் வாழ்வினையே
கௌரவிக்கும் தமிழர் திருநாளிதையே
துயரணைத்தும் தீயிட்டு அழித்திடவ
ஊரணைத்தும் ஒருசேர்சோறு பொங்கிடவே
ஏர்இழுக்கும் தோழன் வணங்கிடவே
பார்தமிழர் சேர்ந்தின்பம் பகிர்ந்திடவே
வாழ்த்திடும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!-
உன் குருதி இனி ஓட வழி இல்லை எனினும்
என் குருதி ஒட தனி வழி வகுத்த உன் சொல்லை வெல்ல முடியாத காலன்,
முடிவென்ன எடுப்பது உன் முடிவை;
ஞாலமும் பொய்யென்ற உன் கூற்றில்
ஞானமே மெய்யென உனை நானும் போற்றேனோ!!
அறம் தாழ்ந்ததோர் செயல்புரின் சிரம் தாழ்த்தியே
ஒரு மரம் உண்ணும் உரம் ஆகலாகேனோ!
எனும் மனம் எண்ணும் தரம் மிகு
தமிழ் வீரம் விதைத்த உன்னை தழல் உண்ணும் போதும் மறவேனோ!!!
-