இங்கு பலரின் வாழ்க்கை....
திருமணம் என்னும் ஐந்து(5) எழுத்தில் இணையாவிடினும்
நினைவுகள் என்னும் ஐந்து(5) எழுத்தில் இணைந்து இருக்கலாம் என்று!!!!-
காதல் தோல்வி
காலங்கள் யாவும் சேர்ந்திருப்போம் என்று நினைத்த நாம்
காலத்தினால் பிரிந்தது ஏனோ?
கரம் கோர்த்த நம் கைகள் இன்று
வெறுமையாய் போனது ஏனோ?
வரமாய் வருவேன் என்ற நீ இன்று
வராமல் போனது ஏனோ?
இரவு பகல் பாராது தொடர்ந்த நம் தொலைபேசி பயணம் இன்று
கேட்பார் அற்று கிடப்பது ஏனோ?
கடற்கரை பாத சுவடுகள் நம் வருகைக்காக காத்திருக்கின்றன..ஆனால் பாவம் அவை அறியாது இனி என்றும் நாம் அங்கு வரமாட்டோம் என்று?
நினைத்த சொப்பனம் யாவும் பொய்யாய் போனது..
பிரிந்தது நம் காதலாயினும் என்றும்
என் மனதில் இருக்கும் வடுவாய்!
என் கரம் பற்றவில்லை என்றாலும்
வாழ்வில் நீ சிரம் உயர்த்தி வாழ இக்காதலியின் ஆழ்ந்த அன்புகள்...
என்றும் ப்ரியமுடன்
-
எழில் மிகுந்த ஓவியமடி நீ
அழகிய மேனிதனில் சந்தன வாசமடி
கார்குழல் மேகமாய் இவளது கேசம்
கிளியின் கோவப்பழ அலகாம் இவளது மூக்கு
குமுத செவ்வாய் தனில் பச்சரிசியாம்
இவளது பற்கள்
மழலைகளை கொஞ்சும் தங்க பவனமாய் இவளது கரங்கள்
பரந்த ஆழிக்கடலின் மணலில் நடக்கும் அழகிய பூவாம் இவளது பாதம்
மனதில் வெண்மையும் இதயத்தில் தூய்மையும் கொண்டவளாம் இவள்
வாழ்வினில் என்றும் வசந்தங்கள் வீச
என்றும் ப்ரியமுடன் உன் ப்ரியா...-
தமிழ் இச்சொல்லிற்கு தான் எத்தனை தனித்துவம்!
தாய் மொழியாம் எம் தமிழினை போற்றிட யாம் இங்கு வந்துள்ளோம்..
இத்திரு தாய் நம்மை பத்து மாதம் சுமக்கவில்லை என்றாலும் நம் முத்த குடியின் முதல் தாய்!
தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! என்ற கூற்றிற்கு
நமக்கென தனி கர்வம் உண்டு!
திருக்குறள் தொல்காப்பியம் சிலப்பதிகாரம், மணிமேகலை என தமிழின் பெருமையினை இப்பார் போற்றிட ஏற்பட்ட நூல்கள் ஆகும்!
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நாம்
இன்று ஏனொ ஒரு வாழ்த்து கூட தமிழில் அனுப்புவதில்லை..
மருது சகோதரர்கள்,வீரபாண்டிய கட்டபொம்மன்,வீரத்தாய் வேலுநாச்சியார் என தமிழ் உச்சரிப்புக்கு பெருமை சேர்த்த இவர்களை நினைவில் கொள்வோம்!
இச்சுவை மிகுந்த பைந்தமிழினை நாம் தூக்கி கொண்டாட வேண்டாம்..
இவற்றி்னை மிதிக்காமல் , விட்டு தராமல் இருந்தாலே போதும்..
ஆங்கில் புத்தாண்டை பீச்சிலும் பாரிலும் கொண்டாடும் நாம் ஏனோ
இப்புத்தாண்டினை ஒரு வாழ்த்து அல்லது statusயில் கூட கொண்டாடுவதில்லை..
அதற்கு என்று நான் ஆங்கிலத்தை வெறுப்பவனும் அல்ல!
தமிழினை விட்டு கொடுப்பவனும் அல்ல!
நாம் எத்துணை தூரம் சென்றாலும் எங்கே இருந்தாலும் நம் தாயினையிம் தாய் நாட்டினையும் தாய் மொழியினையும் மறக்க கூடாது!
இத்தமிழ் புத்தாண்டில் சந்தன தென்றல் வீச,இன்பம் பொங்க, சோகங்கள் விலகி மகிழ்ச்சி எனும் கடல் விரிய இத்தமிழ் ப்ரியாவின் வாழ்த்துக்கள்!
-
மௌனம் என்னும் சொல்லிற்கு
உன் பெயரே அழகு
பேசாத நேரத்திலும் என் மனதில் இருப்பதை தெரிந்துக்கொள்ளும் உன்னத தோழி.
என்றைக்கும் வேற்றுமை என்பது நம்மடையே இல்லை
உன் தோளில் அதிகம் சாயவில்லை என்றாலும்
மனதளவில் என்றும் உனக்கென்று தனியிடம் உண்டு
என்றும் உன் நினைவில் இருக்கும் ப்ரியா.....-
கோபத்தின் அக்னி ஜூவாலை
பெண் குழந்தையாக பிறந்து
செல்ல மகளாக வளர்ந்து
பூப்பெய்த நாங்கள்- பின்
நடை ,உடை என அனைத்திற்கும் கட்டுப்பாடு
சற்றே குரலை உயர்த்தினால் பெண் பிள்ளை மெதுவாக பேசு என்பர்
உடையினில் வேறுபாடா! பார்க்கும் பார்வை ஏளனம்
அதையும் மீறி சேலை உடுத்தினால் அதற்கும் சினுங்கல்கள்
எங்களை தெய்வமாகவோ (அ) பராசக்தியாகவோ பார்க்க வேண்டாம்
சக மனுஷியாக பார்ததால் போதும்
காம இச்சைக்காக உறுப்பு நுழையாத இடத்தில்
உன் வீரம் காட்டுவது ஏன்?
அவளின் அனுமதியின்றி தொடுவது எவ்வளவு அறுவறுப்பு என்பது உனக்கு நடந்தால் மட்டுமே புரியும்...
நாங்களும் எங்களின் இச்சைக்காக உங்களை
நாடினால் என்ன ஆகும் நாட்டின் நிலை?
எங்களுக்கு மட்டுமே கர்ப்பு என்று ஒன்று
உள்ளது என்பது நாளெ இந்த நிலையென்றால்
பெண்கள் யாவரும் கர்ப்பபையினை எடுத்தால் என்னவாகும் என்று சிந்தியுங்கள்!
காமவெறி ,காமயிச்சை என் அனைத்தையும் விட்டு
அவள் மாதவிடாய் நேரத்தில்,அவள் குழந்தைபிறப்பு நேரத்தில் அவள் படும் பாடினை நேரில் பார்!
அப்படியும் உன் தாகம் தீரவில்லை என்றால்..
எந்த உறுப்பினை கொண்டு
நிர்கதிக்குத் நாங்கள் தள்ளப்பட்டோமோ அந்த
ஆனுறுப்பை நாங்களே அறுத்து செங்குருதி பீச்சிடும் வலியினை இந்த வெறியர்கள் அடைய வேண்டும்!
பெண் இனமே பயம் கொள்ளாதே!
நிமிர்ந்து நில்!
தன்னம்பிக்கையினை இழக்காதே!
புதியதோர் உலகம் செய்வோம்!!
-
பத்து திங்கள் உன்னை பெற்றவள் தாயாகிராள்
உடன் பிறப்பாய் உனக்கு அவள் மற்றொரு தாயாகிராள்
உடன் சாய தோழியாகவும்
உயிராய் நேசிக்க காதலியாகவும்
வாழ்க்கை முழுவதும் துணையாக மனைவியாகவும்
செல்ல மகளாகவும்
இப்படி வாழ்வின் அனைத்து அங்கங்ளாக இருப்பவள் பெண்
பராசக்தியாக பார்க்க வேண்டிய அவளை சில மிருகங்கள் காம இச்சையாக பார்ப்பதே இங்கு வேதனை அளிக்கிறது #
அவளின் பார்வை கோபத்தின் அக்னி ஜுவாலையாக தெறிக்கும் பேச்சு என அனைத்திற்கும் அர்த்தம் உண்டு..
அவள் மாதவிடாய் காலத்தில் சேயாகவும்
அவளின் துயர் காலத்தில் கண்ணீர் துடைக்கும் தாயகவும்
அவளின் கண்ணீர் துடைப்பவனாக இல்லாவிட்டாலும்
அவளின் கண்ணீருக்கு காரணமாக இருக்காதீர்கள்..இப்படி
யாதுமாகி இருப்பவளாகியாக பெண்ணின் பெருமையினை போற்றுவோம்!
மகளிர் தின வாழ்த்துக்கள்!!!!
-
வாழ்வின் உச்சி குளிரும் நாள்..
பெண் என்பவளுக்கான முழு அங்கீகாரம் பெற்ற நாள்
என்னை நானே புதுப் பிறப்பாய் எண்ணிய நாள்
என்னவரின் வருகை
கண்களில் நீரோடை பெருக
முகத்திலோ தீராத ஏக்கம்
பாசம் என்னும் அழகிய வலையில் நாங்கள்..
மசக்கியாக மாங்காய் உப்பு ,புளி.
நாவிற்கு ருசியாக
கைத்தாங்கும் பொம்மையாக பாவித்து
உருகி உருகி செய்யும் உபசரிப்புகள்
கைக் குலுங்கும் கண்ணாடி வளையல்களின் ஓசை..
வளரும் சேயின் உதைத்தல்..
சிரமங்கள் பல இருந்தாலும்
பத்து திங்களின் காத்திருப்பு
100 டெல் unit மின்சாரம்
100 எலும்புகள் உடையும் போல
அனுபவித்த வலி..
எம் சேயின் முகம் பார்த்து மறைந்தது
மறைந்தது வலி மட்டும் அல்ல..
நீண்ட நாளின் வேதனை...!!!
-
தோழி
பிரியும் நினைவுகளில்
உள்ளம் கனமாகிறது
இனி உன் விரல்
பிடிக்க முடியாதென்று..
ஆனால்
உள்ளம் சிலிர்க்கிறது
இனி உன் மனதில்
நீங்காமல் இடம் பிடிப்பேன் என்று!!
-
என் தாய் என்னை தூக்கி ஆர தழுவுமுன்
எந்தன் ஸ்பரிசத்தை தீண்டியவள்
செவிலித்தாய்
ஏனோ அவ(ள்) முகம் அறியாத பேதையாய் போனேன்.....
-