நடு இரவினில் 🌃
வரும் நிலவினில்🌙
உன் முகம் அதை 🧚♀️
நான் பார்த்திட😍
விழி நனைத்திடும்🥲
உன் நினைவினில்🫠
வரும் வலியினில்💔
பெரும் தனிமையில் 🚶
காதலை நான் வளர்திட❤️
ஒரு நாள் வருமேன💯
உன்னை கையில் தருமென💝
தினம் தினம் தவம் 🧎
நான் ஏங்கிடும் வரம் 🤌
கட கட வேன 🕝
நாள் ஓடிட 🌔
நான் தேடிட 😒
உன் பக்கத்துல 👫
நான் வர தான் 🤔
நாள் வருமா???
மொத்ததுல✨️
உன சிறைபிடிக்க🫂
விதி வழிவிடுமா???💁♂️
-
எனக்கான காதல் கடிதம் ....
காதலை அனைத்திலும் தேடி அலைந்து
கடைசியில் உணர்ந்து கொண்டேன்
எனக்கான காதல் நான் தான் என்று...
எங்கு சென்றாலும் யாரை நாடினாலும்
எந்த உறவாயினும் ,காலம் ஒன்றை எடுத்து ஒன்றை கொடுத்து கொண்டு தான் இருக்கின்றது உறவாக சிலர்
நினைவாக பலர் ...
தாய், தந்தை, தம்பி, தங்கை
தோழன், தோழி ,காதலன் ,கணவன்
பிள்ளைகள் பேரன் பேத்திகள் என
உறவுகள் நீண்டு கொண்டே சென்றாலும்
எந்த உறவாளும் நம்மை நாம்
ஏற்றுக்கொண்டது போல் நம்மை நாம் நேசிப்பது போல் நம் உணர்வுகளை
புரிந்துக்கொள்ளவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது ,
நமக்கு பின்னால் ஆயிரம் பேர் இருந்தாலும் முன்னால் நின்று வரும் கஷ்டம் நஷ்டம் வெற்றி தோல்வி என அனைத்தையும் சலிக்காமல் கையான்டு விழும் போதெல்லாம் விடு பார்த்துக்கொள்ளாம் என நமக்கு நாம்
கொடுக்கும் மனதைரியத்தையும்
உலகில் யாராலும் தர இயலாது
காதலை கல்லிலும் செல்லிலும் தேடி கொண்டு இருக்காமல் நம்மில் தேடுவோம்
மாற்றம் மட்டும் அல்ல
காதலும் நம்மில் இருந்து தொடங்கட்டும்
-
இறப்பிற்க்கும் பிறப்பிற்க்கும்
இடையில் சிலறால் மனதால் பலமுறை
இறந்து உடலால் மட்டும் உயிர்வாழ்கின்றோம் .....-
காயங்கள் பல கொண்ட போதும்
ஏமாற்றம் பல கண்ட போதும்
மாறாமல் மண்டி கொண்டு
தவிக்கும் மனமே சாட்சி
உண்மையான காதலுக்கு-
மீண்டும் மீண்டும்....
உன்னில் காதல் கொண்டேன்
இதயம் கடந்து ,உதிரம் முழுதும் நிறைந்து என்னில் கறைந்துவிட்டாய்
என்னில் நீ எங்கே! என்று தேடினேன் ?
விடையே வினாவானது
என்னில் எல்லாமும் நீயாக மாற
பார்க்காமல் காதல் பேசாமல் காதல்
படத்தில் பார்த்ததுண்டு...
வார்த்தையின்றி பார்வையின்றி
இருபத்தொன்றாவது நூற்றாண்டிலும்
காதல் மலரும் மாயம் கண்டேன் உன்னால் இன்று...
விலக விலக நெருங்குவதும்
கொடுக்க கொடுக்க கூடுவதும்
இயற்பியலில் எந்த விதி என தெரியவில்லை ...ஆனால் இது
காதலின் முதல்விதி என தெரிந்து கொண்டேன் உன்னால் ....
இதயத்தின் அறைகள் மட்டும் அறிந்திருந்தேன் முன்னால்
இதயத்தின் மொழிகளும்
புரிந்து கொண்டேன் உன்னால்...
பல மையில் தூரத்திலும் என்னை
நெருங்கி மூச்சுதிணற வைக்கின்றாய்
உன் நினைவுகளால் ...
கண்ணீர் சிந்திடும் வேளையில்
காற்றில் மிதந்து வந்து
கண்ணம் உலர்த்துகின்றன
உன் வார்த்தைகள் ....
இயற்கை காதலை தாண்டி
இயற்கைக்கும் காதல் மீது காதலுண்டு என அறிந்தேன் உன்னால்..
கனவிலும் நினைவிலும்
என்னை தொடர்கிறாய்
நிழலாக, நிஜமாக ,உடலோடு உயிர் சேர காத்திருக்கும் உடல் இங்கே...உயிர் அங்கே....-
கோபத்தில் நாம் உதிர்த்த
வார்த்தைகளை
சேகரித்து அகராதி எழுதும்
உறவுகளை விட ...
விழியின் மொழியில்
மனதின் குணமறிந்து
தொடரும் உறவே மேலானது-
இறந்து மீண்டும் பிறக்கின்றேன்
நம் ஈரிதழ்கள் ஒன்றாய் இணைகையில்
-
உன்னை கண்டு கழித்த விழிகள்
உன்னோடு கை கோர்த்த விரல்கள்
உன் வாசம் வீசும் என் உடைகள்
உன் பாதம் தொடர்ந்த சிறு நடைகள்
உன் தோள் சாய்ந்த நொடிகள்
இப்படியே தொடர்ந்திட கூடாதா, அல்லது
அப்படியே உறைந்திட கூடாதா
என் உயிர்வளியே (ஆக்சிஜன்)...
-