எண்ணெய் கிணறுகளுக்கு தொடங்கிய போர்
எந்தன் குழந்தைகளை பாதிப்பது ஏன்?
சிரித்து களைக்க வேண்டிய வயதில்
தொலைத்து தேடுகின்றது தாய் தந்தையை..
பசித்தால் கூட சொல்லத் தெரியாதே இதற்கு..
அழுகிறாய் அன்னையைத் தேடி..
இடிகிறேன் இங்கு நான்..
அள்ளி அணைக்க ஆசைகொள்கிறேன்
அகதியாகவாவது இங்கு வரமாட்டாயா?
-
என்ன பாவம் நான் செய்தேன்
என்னை ஏன் வதைக்கிறாய் ? ? ?
எண்ணெய் கிடங்குக்காக ஓர் கூட்டம்
ஆளுமை செலுத்த மறு கூட்டம்
இது உலக அரசியலின் சதித்திட்டம்
இதனால் அப்பாவி உயிர்களுக்கே
ஊசல்லாட்டம் ...
எம் இன அழிவை மறைக்கும்
போர்வைக்கு பெயர் போராட்டம்
சிசு என கூட இரக்கம் இல்லையா ? ? ?
சிரியா மண்ணில் பிறந்தது ஏன் பிழையா ? ? ?
மண்ணில் மடிவது நான் அல்ல
மனிதமும் தான் உலகத்தை
இன்று பிரிகிறது ...-
உயிருடன் இருந்தும் நம்மால் எந்தவொரு பிரேச்சனையும்
தீர்க்க முடியவில்லை.
இப்பொழுது சிரியாவில்
நடக்கும் வன்முறையை கண்டு
மனது வெறுப்பு கொள்கிறது.
சில பாவிகளின் சுயநலதால்
மொத்தநாடும் அவதிபடுகின்றது. ஐக்கிய நாடுகள் கூட்டு என
சொல்லி கொள்ளும் ஒரு
அமெரிக்கா பினாமி செயல் அரங்கு மனிதத்தை என்றுமே நிலைநாட்டியது இல்லை,அதனிடம் எப்படி நன்மை எதிர்பார்க்க முடியும்?
இந்த அனைத்து உண்மையும்
தெரியாமல் இந்த மழலை
மாறா சிரிப்புடன் ஏன் இறக்கிறோம்
என்று கூட அறியாமல் இறந்து
போகின்றனர் சிரியா சிறார்கள்.-
சிரியா கொடுமை
தன் உதிரத்தில் அவதரித்த சிசுவை
இரத்த வெள்ளத்தில் காண்பது கொடுமை அன்றோ ? ? ?
தன் கருவறையில் காத்த குழந்தையை
பிணவறையில் காண்பது கொடுமை அன்றோ ? ? ?
உண்டு மகிழ்ந்த சிசுவை
குண்டு உண்பது கொடுமை அன்றோ ? ? ?
பெற்றோரின் அரையை கூட கண்டிராத குழந்தை
தீக்கு இரையாவது கொடுமை அன்றோ ? ? ?
சாலையில் ஓடும் உதிரமும் சொல்லவில்லை
உருகுலைந்து கிடக்கும் உடலும் சொல்லவில்லை
அச்சத்தில் வரும் கண்ணீரும் சொல்லவில்லை
சுன்னி இனமா சிரியா இனமா என்று ...
போரை முடிப்போம் சிரிய மக்களைக் காப்போம் ...
-
வாழும் போதும் நிம்மதி இல்லை
இறக்கும் போதும் நிம்மதி இல்லை
இப்படி நிம்மதி இல்லாமல்
அப்பாவி சிரியா மக்கள்
வாழ்வை சீரழித்த ஆயுத
வியாபார கொடூர நாடுகளே,
நீங்கள் அவர்களுக்கு செய்த
வினைக்கு எதிர்வினையை
கண்டிப்பாக ஒரு நாள் சந்தித்தே தீருவீர்கள்-
எங்கள் கற்பால்
எந்த மதத்தை ஓங்க செய்யப்போகிறாய் ?
எங்கள் பிணங்களை வைத்து
எந்த நிலத்தை ஆட்சி செய்யப்போகிறாய்?
யார் சக்தி பெரியது என்று நிரூபிக்க எங்கள் உதிரமும், குழந்தைகளின் கண்ணீரும் ஒரு தீணியா ?
கூட்டணி பிரித்தது நடுவில் இருப்பர்வகள்
மாண்டு சிதைவதை வேடிக்கை பார்ப்பதற்கா?
186 லட்சத்தை 7600 கோடி காப்பாத்த முடியவில்லை!
மன்னித்துவிடுங்கள்!
-
"கடவுளுக்கு கடவுள் இல்லை எனில் கருணை உள்ள மனிதனுக்கு"
மழலை மொழிகள் எல்லாம் மரண ஓலமாய் மாறுவதோ?
குழந்தை குரலெல்லாம் கூக்குரலாய் கேட்பதோ?
இதயம் உண்டா? இறைவா உனக்கு,
கருணை உண்டு எனில் காப்பாற்று சிரியாவை.
வஞ்சக மனிதரினால் பிஞ்சுகள் தீயில் வெந்து சாகவேண்டாம்.
இதனை கண்டு எங்கள் மனமும் நொந்து வேகவேண்டாம்.
மனிதனின் மனத்தை மாற்றிவிட்டு.
இந்த மழலை செல்வங்களை வாழவிடு.
அப்பாவிக்குழந்தைகளின் அப்பா அம்மாவை திருப்பி கொடுத்து விடு.
இல்லை அது உன்னாலும் முடியாது.
முடியுமெனில் அன்புள்ள நெஞ்சங்களை அவர்களுக்கு ஆதரவாக்கு.-
இஸ்லாம் வளர்ந்தது
இனிய நபிகளின் அன்பால்
இந்த சன்னி ஷியாவினால் அல்ல
இடையில் அந்நியரை
இழுத்து வந்த சிரியா சிதைகிறதே
இனியாவது இணைந்தால் வாழ்வு
இல்லையேல் அழிவது உறுதி!
... அருண் குமார் வேலுசாமி.
-