காட்சிகள் கவிதை
கடல் தீவு அமைதி
நிழல் பிம்பம் கனவு
நித்திரை கொள் மனமே
நிஜமான ஒன்று நிகழ்காலம் தான்
நேர்ந்ததை நினைத்தால் நிம்மதி இல்லை
மாற்றத்தின் குழந்தை மனமே
மறவாதே நான் மனிதன்-
இல்லாதவனுக்கு இல்லை என்று சொல்லாமல்
அள்ளித்தரும் நாள் அல்லா ஈந்த ஈகைத்திருநாள்.
எல்லோருக்கும் பசி உண்டு என்று எடுத்து சொல்லும் நாள்..
பசி கொண்டார்க்கு புசி என்று உணவை ஊட்டிவிடும் நாள்..
உண்ணா நோன்பு இருந்து மற்றவனுக்கு உண்ணத்தரும் நாள்..
எந்நாளும் ஈகை திருநாள் என்றாக வேண்டும்.
எல்லோரும் இல்லார்க்கு எப்போதும் அள்ளித்தர வேண்டும்
என்ற எண்ணத்தை போதிக்கும் அந்த ஒரு நாள்
அல்லா ஈந்த ஈகைத்திருநாள்..
-
என்ன நல்வினை செய்தேனோ என் அண்ணல் தாழ் இன்று
பற்றி நின்று பக்தி செய்ய..🪔-
அணுவின் அசைவோ
அண்டப்பெருவெளி இசையோ
அழகுமதியோ ரதியின் அச்சுப்பிரதியோ
பிறப்பு தொழிலில் பிரம்மன் பெற்ற பரிசோ
இறவா தமிழில் இறைவன் எழுதிய மடலோ
இவள்தான் யாரோ
இயற்கை எனக்கே இயற்றிய உறவோ...-
பின்னிரவில் மனதில் அமைதி அலை வீசுகிறது. அலை பாயும் மனம் அடங்கிப்போகிறது. யாராக இருந்தாலும் எளிதில் நம்பி விடுகிறேன். மேகங்கள் இறைக்கும் நீர்த்துளிகள் போல உள்ளத்தில் உள்ளதை அள்ளி அடுத்தவரிடம் கொட்டிவிடுகிறேன். இரவில் நடத்தும் பேச்சு வார்த்தையின் போது ஏன் இந்த இரவு இன்னும் கொஞ்சம் நீளக்கூடாதா என்று தோணும். இன்பத்திற்கு காரணம் தேவைப்படுகிறது. துன்பத்திற்கு காரணம் தேவைப்படுகிறது.. ஆனால் ஏனோ அமைதிக்கு அமைவதில்லை ஒரு காரணமும்.. நடு இரவிலும் நட்சத்திரங்களிலும் கண் மூடிய இமைகளிலும் காற்றில் அசையும் இலைகளிலும் இறைவன் அமைதியை ஒளித்து வைத்திருக்கிறான் என்பதை உணர்ந்துக்கொண்டேன்... காதலுக்கும் இரவுக்கும் அமைதிக்கும் ஏதோ ஒரு முக்கோண பிணைப்பு இருக்கும் என்றே தோன்றுகிறது... மூன்றையும் ஒன்றாய் அனுபவித்த அனுபவங்கள் பல உண்டு... இந்த நிகழ் காலம் நின்று விட வேண்டும் இந்த இன்பமான எண்ணத்திலே...
-
தேடலை நோக்கி தொடரும் பயணம்
தெளிவு பிறக்கும் வரை நீண்டு
கொண்டே செல்கிறது.தேடலின் விடை தேடும் ஒரு மனத்தின் திறவுகோல் ஆகிறது. கடந்து வந்த பாதையில் நடந்து சென்றோர் பலர். பயணத்தில் தள்ளாடும் காலத்தில் நம்மை தாங்கி வந்தோர் சிலர். பாதையின் திருப்பத்திலே பாலைவனம் நந்தவனம் ஆனது. பாதச்சுவடுகள் நினைவானது
தொடக்கத்தின் அர்த்தம் பயணம் தொடரும் போது கிடைப்பதில்லை.
முடிவே தொடக்கத்தின் அர்த்தம் என்பதை பயணத்தின் பாதி வழியில் உணர வாய்ப்பு இல்லை அல்லவா!
பயணத்தை தொடருங்கள்..
-
YourQuote செயலியில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் அன்பின் இரவல்
-
அண்டத்தின் அலையை என்னுள் அடக்கி எண்ணமாக்கி எண்ணத்தை எழுத்தாக்க எழுதுகிறேன் நான்...
-