உதிர்க்கா உதிரத்தில்,
உதிக்கா கருவில்,
உறைந்திருந்த பசும் பாசம்.
உயிர்ப்போடு சுமந்த மனதில்
தவழ்ந்த மனக்குழந்தை அவள்.💕
ஒளிந்திருந்த தாய்மைக்குள்
ஓடி விளையாடிய செல்ல
தமக்கையாக,தங்கையாக,
என்றும் அவளின் குட்டி
பேசும் பொம்மையாகவே - அவன்.💕
சின்னம்மா என்ற பெயருக்குள்
அடைபடா சிட்டுக்குருவி.😄
-
புதிதாய் பூக்க விருக்கும்
அதன் மேல் தூறிய
முதல் துளி மழையாய்
காத்துக் கிடக்கிறேன்,அதன்
சிலிர்ப்பில் சிதறி விழவும் அன்றி
அன்றள்ளி எடுத்துத் துள்ளி விளையாடிய
அல்லியதன் சாயல் காணவுமே
இவன் அல்லியின் கதைசொல்லி.💕
-
ஆகாயத்தையும், கடலையும்
பிரித்து காட்டுகின்றது.!!
தூரத்து படகின்
சிறு விளக்கு!!!-
வானத்தை உடைக்கிறாள்
உடைந்ததும் - பாவம்
பார்த்து விட்டு
ஒரு விரல் நீரால்
ஒட்ட வைக்க முயல்கிறாள்
ஒட்டிக் கொண்டது
குட்டி வானம்
கைக் குட்டை நீரில்.😍🍧
-
என் இதயத்தை
எட்டிப் பார்க்கிறேன்
உன் நினைவுகள்
குட்டிப் போட்டிருக்கிறது!
அழகி ❤️
-
மரகதச் சிறகுகள்
*************************
அந்த இரண்டாம் சிறகினை விரிப்பதற்குள்
எத்தனையோ அழகான நினைவுகளை
ஒளித்து வைத்திருந்தாள் அந்தக் குட்டி தேவதை
ஒவ்வொரு நினைவும் ஒரு சிதறலாகி
மழைத்துளிகளாக மனதை நனைக்க
மறந்திருந்த பேனா முனைகளை நினைக்க வைத்தது
எங்கோ வறண்டு கிடந்த என்
எழுத்தாணிக்குள் உயிர்"மை"யாகி
சிதறிக் கிடந்த எழுத்துக்களை ஒவியமாக்கி
தூய வெண்புன்னகையின் முகவரிக்குள் புகுந்து
பட்டாம்பூச்சியாய் படபடக்கும்...
மனதில் சிரிக்கும் மரகத ஒளி
மழலை மொழி - அவள்
மன மொழிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...-
பிறரிடத்தில்
பிரதிபலிப்பாய்..
நின் பிடிவாதம்..
காணுகையில்.
மயிலிறகாய் வருடி..
செல்வது...
ஆறுதலான
வார்த்தைகளும்..
அரவணைத்த..
சிறு சில..
குட்டி சுட்டிதனமும்...
குறும்புகளில்
முரட்டு குணமும்...
-
தோழிக்கென ஒரு 👼🏻தூளி..
வெண்மஞ்சள் நிறத்தில் ஒர்
தூளி செய்து🌙...
வான்மிஞ்சும் விதத்தில்
மீளச்செய்து...
எட்டாத உயரத்தில் எட்டி
வைத்து வான்வழியில்☄️,
மீனிடையில்💫 அனுப்பிய
தூது....
அதை பக்குவமாக பிடித்து
உங்கள் சிலுவைக்கு அருகில்
அடித்து வைத்துக்கொள்ளுங்கள்
உனக்கென அது வளரும்🌝
உனக்கென அது கறை(ர)யும்🌙-
அவள் செய்யும்
குறும்புத்தனத்தில்
மறந்தே போகிறது
கவலைகள்
குட்டி தேவதை அவள்
-