Yamuna   (யமுனா கவி 💞)
297 Followers · 56 Following

Joined 22 June 2020


Joined 22 June 2020
3 APR 2022 AT 23:47

காயப்படுத்தி
தூக்கிப் போட்ட
பிறகும்
என் மனமும்
இப்படித்தான்
சிரித்துக்கொண்டே
இருக்கிறது
வெறுத்து
ஒதுக்க முடியாத
காரணம் நீ ஆனதால்

-


26 MAR 2022 AT 23:57

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று..!

வாழ்க்கையும் அப்படித்தான்

முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று!!

-


26 MAR 2022 AT 23:39

எனக்கான
சில அழகான
நாட்களை
நீ தந்து போனதாலோ
என்னவோ
இன்னமும்
என் வாழ்நாள்
மிச்சமிருக்கிறது
உன் ஞாபகங்களால்
தொடர

-


12 MAR 2022 AT 13:42

எத்தனையோ
வேலைகளுக்கு நடுவில்
அடிக்கடி வந்து
எனைத் தீண்டிச் செல்லும்
செல்ல ஞாபகம் நீ

-


1 MAR 2022 AT 6:06

வாழ்வதும்
வீழ்வதும்
ஒரு முறைதான்

வாழ்வது சாதனை
ஆகட்டும்!!

வீழ்வது சரித்திரம்
ஆகட்டும்!!— % &

-


31 JAN 2022 AT 23:49

மழை வந்ததும்
கூடவே வந்து
ஒட்டிக்கொள்ளும்
மண் வாசம் போல

அவனின் நினைவுகள்
வந்தாலே வந்து
ஒட்டிக்கொள்ளும்
என் நாணமும் — % &

-


31 JAN 2022 AT 1:24

அன்று உன்னை
சந்தித்த பொழுதுகள்
தித்தித்தது
என் இதயத்திற்கு

இன்று யோசிக்கிறேன்
ஏன் உன்னை
சந்தித்தேன் என்று

நீ விலகியதை
ஏற்காத என் மனதை
என்ன சொல்லி
ஆற்றுவேன்
— % &

-


29 JAN 2022 AT 0:28

நம் கோபத்தைத்
தூண்டி விட
நமக்குப் பிடிக்காத
ஒருவரால் முடியுமென்றால்
நம்மாளும் முடியும்
அந்த கோபத்தைக்
கட்டுப்படுத்த
— % &

-


28 JAN 2022 AT 23:56

நீ தந்த பிரிவின்
ஏக்கங்கள் — % &

-


27 JAN 2022 AT 23:33

உன் கோபம்
என்னை
என்ன செய்யும்

மிஞ்சி மிஞ்சிப் போனால்
அழவைக்கும்

ஆனால்
நான் அழுத
அடுத்த நொடி
நீ எனை
சமாதானம் செய்யும்
அன்புக்காக
அடிக்கடி
உன் கோபத்தை
ஏற்றுக்கொள்வேன் — % &

-


Fetching Yamuna Quotes