பகலவன் படரா
பாதாளத்திற் பாவலன்
பசலை படர பாதரசமாய்
படிகிறதென் பாற்கடல்!
அழகி❣️
— % &-
அழகி
(MeeRa)
85 Followers · 91 Following
❇️ There's a Beauty in Simplicity
Joined 16 December 2020
5 FEB 2022 AT 2:52
21 JAN 2022 AT 21:16
சேய்மையில் நோக்க
படரிக் கொண்டிருந்த
விழிகளின் செழிப்புகள்
அண்மையில் நோக்கவே
அழகாய் அர்த்தப்படும்
இடரிக் கொண்டிருந்த
இதயத்தின் இழப்புகள் என!
அழகி🌺
-
15 AUG 2021 AT 21:06
உணர்வுகளில்
நீ நுழைந்ததும்
உமிழ்நீர்
ஊருகிறதே
உயிரது
ஊசலாடுதே
தனிமையில்
தாகமெடுக்கிறாய்!
இனிமையில்
ஊற்றெடுக்கிறாய்!
இன்பனே!
-
5 MAR 2021 AT 12:08
மந்தமாருதத்தில் மலர் மந்தகாசம் வீச
மையல் கொள்ள தழுவுது மணமும்
மையம் கொள்ள தவிக்குது மனமும்
மலரின் வாசம் தேடும் வண்ணத்துப்பூச்சியாய்..!
அழகி 🧚
-
7 JUN 2021 AT 9:49
எதையும் எதிர்பாராமல்
உங்களை நேசிப்பவர்களை
அலட்சியம் செய்து செய்தே
வெறுக்க வைத்திடாதீர்!-
6 JUN 2021 AT 18:09
இருக்கும் வரை
புரியப் போவதே
இல்லை உனக்கு!
இல்லாமல்
போனப் பிறகு
புரிந்தென்ன?
புரியாமல்
இருந்தென்ன?
அழகி 💔
-
24 MAY 2021 AT 21:06
வெறுப்பதற்கு
காரணங்கள் இருந்தும்...
விலகுவதற்கு
காரணங்கள் இருந்தும்...
விரும்பிக் கொண்டே
தானிருக்கிறது
எதையும் எதிர்பாராத
இதயங்கள் !
அழகி 💞
-