சுமக்க முடியாத
இந்த பாரமான
அன்பினால்.,
நான் மெலிந்து
போகிறேன் அப்பா.,
இப்போதாவது
சொல்லிவிடுங்கள்.,
நீங்கள் சுமந்த
அத்தனை பாரமான
அன்பை, இறந்த பின்,
எங்கே தான் இறக்கி
வைத்தீர்கள்..!!-
◆5 oct 1991
◆ your quote: 1jul2018😇
விழுந்து கொண்டிருந்த
வெளிச்சத்தின் முன்னால்,
எனை நிறுத்தி போனார்கள்.,
உண்டான இருள்,
என்னாலென எண்ணி
நான் வருந்த.,
நீங்களோ.! அதை வெறும்
நிழலென கடந்தீர்கள்..!!-
பொதுவாகவே,
ஆபரணங்களின் மீது
பற்றில்லாதவனுக்கு.,
ஏனோ, அவள் மீது
மட்டும், அத்தனை
பற்று..!!-
வடக்கும், தெற்கும்,
கிழக்கும், மேற்குமாய்
சுழலும் அக்கண்களை,
என்னால் நேராக கூட
பார்க்க முடியவில்லை.,
வேறு எங்கு பார்ப்பது.,
வேறெங்கு பார்த்தாலும்,
முதல் சந்திப்பிலேயே
தவறாகி போவேனே.,
இதனை எண்ணியே,
அன்று நீ பேசிய
அத்தனையும் மறந்து,
நான் கண்ட சிரமத்தை.,
இன்னும் எந்த கவிதைகளிலும்
சொல்லவில்லை நான்..!!-
இத்தனை நாட்களாகியும்
என் நினைவில்லாமல் நீ
எப்படி இருக்கின்றாய்.,
ம்ம்.,
நீ இன்னும்
கடலையும், சிப்பிகளையும்
காணாது இருக்கின்றாய்
சரிதானே..!!-
காலி செய்வதாயிருந்தால்,
இருக்கும் அத்தனையையும்
எடுத்து சென்றிருக்கலாம்
தானே.,
ஏன்.! இத்தனை அன்பையும்,
காதலையும் அப்படியே விட்டு
போயிருக்கின்றாய்.,
நினைவுகளால் நிறைந்து கிடக்கும்
இவ்வீட்டை என்னால் திறக்க கூட
முடியவில்லை பார்..!!-