எட்டி எறிபவன் எதிரி
ஒட்டி உறிபவன் நண்பன்
தட்டிக் கழிப்பவன் எதிரி
தட்டில் கழிப்பவன் நண்பன்
எதிரிக்கு எதிரி நண்பன்
நண்பனுக்கு நண்பன் எதிரி
எதிரே நிற்க வைத்துப் பார்க்க
நண்பனைக் கூட எதிர்க்கலாம்-
நம்பிக்கை நண்பன் ஆனால்,
வெற்றி நம் எதிரி அல்ல...
If hope is our friend,
Success can never be our foe...-
முதல் அடியிலேயே
நிலை குலைய செய்து
அதில் நிதானித்து
சுதாரிக்கும் முன்னமே
அடுத்த அடியில் சாய்ப்பது
எதிரிக்கு மட்டும்
சாத்தியமானது அல்ல...
சில நேரங்களில்
வாழ்க்கைக்கும் சாத்தியமே...!-
எதிரியிடம் தோற்று
மரணிக்கலாம்...
துரோகியிடம் தோற்று
வீழ கூட கூடாது...!-
என்னை பிடிக்காத
உன்னை
கண்டதும்
இதழ்களில் பூக்கும்
இந்த
புன்னகை கூட
இப்போதெல்லாம்
எனக்கு எதிரியாகவே
தெரிகிறது......-
ஒரு கருத்தே சரி என
ஒற்றைக் காலில் நிற்காமல்
இன்னது சரி என
நேற்றைய நானுக்கு
முரண்படும்
இன்றைய நான்தான் நான்...
ஆம்,
என்றுமே என் எதிரி
நான்தான்!
- ப்ரியன்🤘
-
உன்னை வெறுப்பவர்களுக்கு
உன் வெற்றியை பரிசாக கொடு..
தெறித்து ஓடட்டும்...-
When anyone is ready to tell
the truth no one is friends or enemies..
யாருக்கும் யாரும் நண்பர்களும் அல்ல விரோதிகளும் அல்ல உண்மையை சொல்ல தயாராகும் போது.-
வெற்றியடைய நாம் வெல்ல ...
வேண்டியது ..
எதிரிகளை அல்ல ..
நமக்குள்ளே மறைந்து ..
நம் வெற்றியை ..
தாமதப்படுத்தும் ..
தவறான குணங்களை ..-