Shanmuga Priyan Balaji   (IvanPriyan)
2.0k Followers · 82 Following

A person trying to do something best..
Joined 13 June 2017


A person trying to do something best..
Joined 13 June 2017
29 JAN 2024 AT 23:46

பூக்க மறக்கும் மொட்டும்
அழகுதான் !
புன்னகைக்க மறுத்து
தலை குனியும் அவளைப் போல!

- ப்ரியன்❤️

-


20 JAN 2024 AT 0:14

பற்றி கொண்ட இதயத்தை
அணைக்க வந்தவள்
விரல் பட்டதும்
அணைய அடம்பிடித்து
வெடிக்கிறது
ஓர் காதல் எரிமலை!
- ப்ரியன்❤️‍🔥

-


11 APR 2023 AT 10:06

Never regret for being true and genuine!

Other’s manipulation
Or even your self doubt
will not match the power of truth!

- Priyan

-


22 FEB 2023 AT 23:43

திகட்டாத கவியே !
நிற்காத மழையே !
நிஜமான உறவே !
நீ வரவே

மொட்டு விடாத பூச்செடியும்
இதுவரை யாரும் கட்டி பார்க்காத சேலையும்

இருவர் அமர இடமிருந்தும்
வேரு வழியின்றி
ஒவ்வொருமுறையும் ஒருவனையே
அமர்த்திக்கொள்ளும் ஊஞ்சலும்

யார்மீது கொட்டுவது என்றே தெரியாமல்
என்னுள் குவிந்து கிடக்கும் காதலும்

ஆவலுடன் நானும்
காத்திருக்கிறோம்
சீக்கிரம் வா சகியே !
- ப்ரியன்♥️

-


22 FEB 2023 AT 23:40

பூவோடு உரையாடும்
காற்றாக
நானும் நாளும்
உன்னிடம்
கதைத்திருப்பேன் !

விண்ணோடு
விளையாடும்
முகிலாக
உன்னோடு
நான் வாழ
வேட்கை வளர்த்திருப்பேன் !

உன் இதழ்
ஈன்றெடுக்கும்
சிரிப்புக்கு
உன் வாசல் பூவாய்
தினம் பூத்திருப்பேன் !

- ப்ரியன்♥️

-


3 SEP 2022 AT 11:21

பேச வந்தும் பேசாமல் போன
அவள் மவுனத்தில் இருந்து
அத்தனை காதல்
எட்டி பார்ப்பது ஏனோ?

- ப்ரியன்♥️

-


20 JUN 2022 AT 21:02

தானாகவே பகிர்ந்துகொள்கிறது
பாவையும்
பால்நிலாவும்
தினம் இரவில் !!!

-


14 JAN 2021 AT 23:57

U may bet to differ from me
but if u can't accept myself
from liking or disliking something,
it is better to end a conversation
before it starts Dot

-


22 NOV 2020 AT 11:06

ஆசையை
OFF செஞ்சு
வெச்சாலும்
உன்ன பாத்ததும்
தானாக
ON ஆகுதடி!
-ப்ரியன்❤️

-


22 NOV 2020 AT 10:43

இவன் சோலையில்
பூக்கள் பூக்கிறது
மணக்க மட்டும் மறுக்கிறது
மங்கை அவள் காணாதபோது
-இவன் ப்ரியன்❤️

-


Fetching Shanmuga Priyan Balaji Quotes