உயிரின் தேடல்..
👇👇👇-
உயிரின் தேடல் என்றால்
மயங்க மயங்க இசையமைத்த
ஏ.ஆர். ரஹ்மான்
உருகி உருகி பாடிய
ஹரிகரன்
மருகி மருகி தேடிய
அரவிந்த் சாமி
நினைவுக்கு வருகிறார்கள்
என்றவுடன்... எனக்கு
குதித்து குதித்து ஓடிய
மனிஷா கொய்ராலா தான்
நினைவுக்கு வருகிறாள்
என சொல்லி நீ
அடிவாங்கிய ஞாபகம்...-
உழவனின் உயிர் தேடல் விவசாயம்
விதையின் உயிர் தேடல் மழைத்துளி
கருவின் உயிர் தேடல் கருவறை
வரிகளின் உயிர் தேடல் கவிதை(தை)
ஓவியத்தின் உயிர் தேடல் வண்ணம்
நம் காதலின் உயிர் தேடல்
நாம் வாழ்க்கையில் இணைவது-
உயிரின் தேடல்
உண்மையில் எது உயிரின் தேடல்?
உண்மையற்ற உறவுகளை தேடி
உருகுவதா.... இல்லை
உணர்வுகளை ஒளித்து
ஊமையாய் வாழ்வதா???
அதுவும் இல்லை...
இன்றைய உயிரின் தேடல்கள் எல்லாம்
தொடுதிரை காட்சியும்
தகாத ஆட்சியும்
தேகம் தேடும் நீட்சியும்
தெவிட்டாத தீமையும்...
-
என்
உன் பாசம்
உன் பாசமே
எனது ஜீவனின் ஆதாரம்
எனது ஜீவனில் உனது பாசம் கலந்து இருப்பதால்
நம் வாழ்க்கை முழுவதும் நம் காதல் நிலைத்திருக்கும்
ஏன் இந்த உலகம் முடியும் வரை கூட நம் காதல் நிலைத்திருக்கும்
நம் காதல் பலத்தீனால்
என் உயிர் காதல் மனைவி கண்மணியே-
கேட்க சலிப்பதில்லை
கேட்பதே ஒரு வரம் தான்
சொல்லிக்கொண்டே இருக்க வேண்டாம்
சொல்லவும் கூட வேண்டாம்
இருக்கிறது என்பதற்கு சில
அடையாளங்களே கூட போதும்
உயிர்வளியாய் அன்பின் சுவடுகள்...!-