சலனமற்ற இரவுகள்...
அவை
பெரும் சாபங்கள்!!!
-
சிவநாதன் கிருஷாலினி 😊
இலங்கை🔝
வரிகளால் வலிகளை கூறும் என் இ... read more
இழிஞனிவன் ஈவோன் அவனென,
முகரிமை கொண்டு மூதறிவால் நோக்கினும்,
நைச்சியமெனும் நொவ்வல் தீர்த்திடும்,
நுந்தாவிளக்குகள் தனலிழந்து பலகால்....-
ஆழம் பற்றிய
அச்சம் இல்லை
அவள்
அரியாசனத்தில்
அமர்ந்திருக்கையில்.-
பொதிகை மலையில் பிறந்தவளோ...
பொன்னும் மணியும் பூண்டவளோ...
காவேரி நதியில் நனைந்தவளோ...
கார்க்குழல் அள்ளி முடிந்தவளோ...
காட்டாற்று வெள்ளம் கடந்து
கார்மேகத்தை வென்றவளோ...-
கடலும் வானும் சேருமிடத்தில்
கால் நனைப்போமா?
நிலவும் ஒளியும் சேருமிடத்தில்
நீள்கவிதை படைப்போமா?
கனவும் நனவும் சேருமிடத்தில்
உயிர் துறப்போமா?
இல்லை...
கடலும் வானும் தாண்டியும் கூட
துணையாய் நிற்போமா?-
மரத்துல இருந்து விழுந்தவன மாடு ஏறி மிதிக்கிறதும் என் 2018 உம் ஒண்ணு தான்...
அடி மேல அடி...
இருந்தாலும் சில புது முகங்கள், புது அனுபவங்கள் கிடைத்தது...
2019 ஆவது சிறப்பா இருக்கணும்...
-
இவர்கள் நம்மவர்கள் என
நாம் எண்ணுகின்ற எவரும்
உண்மையில்
எம்மவர்கள் இல்லை...-
திறந்த புத்தகம் போல
வாழ்க்கை இருந்தால்
சிலர் சிலநேரம் மகிழ்வுடன்
ஓய்வெடுத்து செல்வர்...
சிலர் சிந்தையுடனே
சிதைத்து செல்வர்...
சிலர் மட்டுமே பின்னொரு நாள்
உதவுமென பேணிப் பாதுகாப்பர்...-
எத்திசையும்
குடிகொண்ட
எம்மவருக்கு,
தித்திக்கும்
தீபாவளி
நல்வாழ்த்துக்கள்...-