கோயில் தரிசனங்களிலும்
வகுப்பறை இருக்கைகளிலும்
இருந்து விரட்டி அடிக்கப்பட்ட
சாதிப் பிரிவினைகள் - இன்று
அரசு வேலை வாய்ப்புகளிலும்
உயர் கல்வி சேர்க்கைகளிலும்
உற்சாகமாய் உலவி வருகின்றது
இடஒதுக்கீடு எனும் சாயம் பூசி!!
- Nandhini Murugan-
நாட்டினில்
எங்களுக்கு
இட ஒதுக்கீடு
கொடுப்பதெல்லாம்
இருக்கட்டும்..!
முதலில்
வீட்டினில்
எங்களுக்கு
மாதங்களில்
இடம் ஒதுக்காமல்
இருங்கள்..!
அது போதும்..! 😠😏-
ஒதுக்கீடு
எப்படி தோன்றியிருக்கும்
இவ்வொதுக்கீடு நிலை?
நிரப்புவதற்கும்
ஒரு வரைமுறை
இருக்கின்றதா
ஒதுக்கப்பட்ட
தருணங்களிளெல்லாம்
எந்த வட்டத்தினை
குறிப்பிடுவதென்று
குழப்பம் எழுகையில்
கண்ணாடிப் பெட்டிக்குள்
வடைக்கும் போண்டாவிற்குமான
இட ஒதுக்கீடுகள்
செய்தித்தாள் விரிப்புடன்
வரவேற்கப்படுகின்றன
என்றோ ஒதுக்கப்பட்டதற்கு
இன்று புதிது புதிதாய்
ஒதுக்கீடுகள் கிளைத்தெழ
உண்மைக்கும்
உரிமைக்கும் இடையில்
ஓர் எண்ணெய்ப் பசை
ஒட்டிக்கொண்டே இருக்கிறது;
விண்ணப்ப படிவங்களில்-
ஆணாதிக்கம் இல்லாத சூழல் இருந்திருந்தால் இந்த இட ஒதுக்கீடு தேவைப்பட்டிருக்குமா என்ன..??
பெண்களைக் குற்றம் சொல்வதை நிறுத்திவிட்டு.,
ஆணாதிக்கத்தை குற்றம் சொல்லுங்கள்..!!
மறக்காமல் தண்ணீர் குடியுங்கள்..!!
ஏன் தெரியுமா..??
உப்பு தின்னா தண்ணி
குடிச்சு தான் ஆகணும்..!!-
ஒதுக்கீடால் உதைக்க பட்டவன்
சமூகநீதியால் ஒதுக்கப்பட்டவன்
பூணூல் பின்னே பதுங்கியவன்
அதிகாரத்தால் உரிமைகளை பதுக்கியவன்
உரிமையை காக்க அதை கைவிட்டவனே
நடத்தும் நாடகம் அரசியலின் யதார்த்தம்-
ஓர் இடத்தில் தேங்கிப்போன நீரை
எல்லாப் பயிருக்கும் ஒதுக்கி
நீர் பாய்ச்சும் உழவுப்பணியே
இட ஒதுக்கீடு ..-
இடஒதுக்கீடு
இருப்பவர்களுக்கா....
இழுவுப்பட்டவர்கா....
இல்லாதவர்கா.....
விளக்கை அணைத்து விட்டு வெளிச்சம் தேடுவது போல்...
சான்றுகளை வைத்துக் கொண்டு சாதி ஒழிப்பது.....
மதிப்பெண் இருந்தும்
மதிக்கதக்க சாதியாகினும்
இடம் இல்லை இட ஒதுக்கீட்டில்....
பிறப்பு
படிப்பு
பணிகள்.....
வேடிக்கையான வெற்று பேச்சால் வீழ்கிறோம் வீழ்த்தியவர்கள் நம்முல் தான்....
#பகுத்தறிவுக்கும்
இதை பகுந்து அரிய பக்குவம் இல்லையா.....
-