தெரியாதிருக்கும் வரை...
பொய்களுக்கு தெரியும் உண்மைகளை
உண்மைக்கு தெரியாது பொய்களை...
இருளுக்கு தெரியும் ஒளியை
ஒளிக்கு தெரியாது இருளை...
உதிர்ந்த இலைகளுக்கு தெரியும்
தன் மரத்தை
தன்னில் துளிர்த்த இலை என்று தெரியாது மரத்துக்கு...
வாழ்க்கைக்கு தெரியும் மரணத்தின் அச்சத்தை
மரணத்திற்கு தெரியாது வாழ்க்கையின் இன்பத்தை...
கவிஞனுக்கு தெரியும் கவிதையை
கவிதைக்கு தெரியாது கவிஞனை...
காதலுக்குத் தெரியும் காதலர்களை
காதலர்களுக்கு தெரியாது காதலை...
நீ என்று தெரிந்த நானும்
நான் என்று தெரியாது நீயும்
யார் என்றோ கடந்து செல்கிறோம்!!!
✍️ அதம்பை கபிலன்
-
காகிதமாய் மாறிவிட்டேன் ....
காற்றில் பறக்க கற்றுக் கொண்டேன்
கடலின் நீளம் பார்த்து விட்டேன்
காட்டின் மௌனத்தை
கேட்டுவிட்டேன்
கண்ணாடி பிம்பமாய் காட்சியளிதேன்
களவாடி கள்வனாகவும் கற்றுத்தேர்ந்தேன்
கலப்பைக்கும் கழனிக்கும் கருத்தரிப்பதை கண்டு கொண்டேன்
காதலும் காமமும் கலவையின் நேர் கோடு என்பதை புரிந்து கொண்டேன்
கடவுளும் கற்பனை தான் என்பதை உணர்ந்து கொண்டேன்
கல்வியும் கலையும் காலத்தால் அழியாது என்பதை கற்றுக் கொண்டேன்
கவுரவமும் கர்வமும் கத்தியின் இரு முனை என ஏற்றுக்கொண்டேன்
கலியுகத்தின் கடிவாளத்தை கட்டவிழ்த்து இந்தக் கவிதையை காட்சிப் படுத்துகின்றேன்-
"வேட்டை மன்னனின் வீரத்தை பறைசாற்ற வீழ்த்தப்பட்ட கூட்டத்தின் கடைசி கோட்டம் நாங்கள்"
உயிர் கொண்ட இனங்களில் மான உணர்வு கொண்ட இனம் மனித இனம்.
அதில் அற நெறிகள் கொண்டது தமிழினம்
"ஊனம் என்றாலும் உறுதி வேண்டும்
இனம் என்ற போது மானம் வேண்டும்"
'இந்த இனத்திற்கு வேண்டும்
இனம் மானம் வேண்டும்'
-
மனிதனின் மகத்தானது கொண்டாட்டங்கள் தான்
என்னைத் தவிர.....
கோபமும் தாபமும் தவிப்பும் ஏக்கமும் ஏமாற்றமும் தான் எனது கொண்டாட்டங்கள்....
பேரதிர்ச்சியையும் பேரன்பும் பெருங்கோபமும் பெரிதாக உணராதவன்.....
தான் வழியில்லா நிலையிலும் வழிப்போக்கனாய் வாழ்பவன் ....
தனிமையின் தாகத்திற்கு தண்ணீராய் இருப்பவன் ....
எதற்கும் மடியாமலும் எதை விட்டும் மீளாமலும்
காற்றையும் வருடி வழியனுப்பும் கவிஞனாகவே வாழ்கிறேன் .....-
நினைக்கின்றப் போதெல்லாம் உந்தன் நிசப்தம் தான்
என்னுள்
நிகரற்ற நினைவுகளை
நித்தமும் துதிக்கச் செய்கின்றது
என் வாழ்வின் அளவில்லாத அழகிய நாட்களையும் அழியாத ஆனந்த நினைவுகளையும்
நிலையாக நினைவூட்டுக் கொண்டே இருக்கின்றது
நிறைவேறாத பயணங்களிலும்
நிராகரிக்கப்பட்ட நிலையிலும்
நிச்சயமாக நினைத்திருப்பேன் உன்னையே...-
தேங்கிய நீரில் விழும் மழை துளியில் உருவாகும் திரவம் போல திரண்டு வாழ்கிறோம்.....
திசை அறியா தேடலில்
திக்கற்று போகிறோம் !!
ஒவ்வொரு துயரமும் நினைவூட்டி கொண்டுதான் இருக்கின்றது துவண்டு விழும் போது எல்லாம் மீண்டும் துளிர்த்து எழுவதை.....
✍️மீ.கபிலன்-
தேங்கிய நீரில் விழும் மழை துளியில் உருவாகும் திரவம் போல திரண்டு வாழ்கிறோம்.....
திசை அறியா தேடலில்
திக்கற்று போகிறோம் !!
ஒவ்வொரு துயரமும் நினைவூட்டி கொண்டுதான் இருக்கின்றது துவண்டு விழும் போது எல்லாம் மீண்டும் துளிர்த்து எழுவதை.....
-
#சேர்ந்து இருந்தால்
செங்கதிரை மறைக்கும் மேகங்களை போல
செல்லும் இடமெல்லாம் என்னோடு சேர்ந்தே வருகிறாய்
செங்காந்தள் மலரின் மணம் போல் பூங்காற்றாய் வீசுகிறாய்
செந்தாமரை இதழின் உருகும் பணியை போல ஒரு நிமிடம் எனினும் வாழ்ந்து விடுகிறேன் உன்னோடு
உனது செம்பொன் ஆடையில்
சிறிதேனும் செம்பஞ்சியின் சாயமாய் சேர்ந்து இருப்பேன் உன்னோடு
செந்நெல் கழனி-யினை கண்ட செங்கால்நாரைப் போல் உன்னைக் கண்டு மெய் மறந்து போகிறேன்
செங்கோலையும் நட்டு விடுவேன்
நீ என்னோடு சேர்ந்திருந்தால்.....
-
காகித பேழைக்குள் அடைத்து வைக்கப்பட்ட காதல் கவிதையினை எப்போது வாசிப்பது ..?
அச்சிடப்பட்ட எழுத்தின் தடயங்கள்
மறைந்துவிட கூடுமோ.....
வரிகளில் ஏதேனும் இலக்கண பிழை நிகழக் கூடுமோ.....
எதுகையும் மோனையும் இடம் மாறக் கூடுமோ.....
என் சொற்களைச் சோர்வடைய செய்யாதே.....
என் எழுத்துக்களை ஏக்கம் கொள்ளச் செய்யாதே....
இப்போதே வாசித்து விடு..!!
இப்போதே வாசித்து விடு..!!
-
என்றோ யாரோ எவரோ என கண்டுகொள்ளாமல் கடந்து செல்லும் பழைய நண்பர்களையும் காலம் புதுப்பித்து கொடுத்து விடுகிறது
-