இங்கு எல்லா
வெற்றிகளும்
சமத்துவமானவை
அல்ல-
முனையும் ஓர் சிறு வினைஞன்.
சகி
என்னில் நிறைந்து
இருக்கிறாய்
என்னுள் கரைந்து
இருக்கிறாய்
மறைந்து இருக்கிறாய்
என்னுள் புதைந்து
இருக்கிறாய்
மொத்தத்தில் யாவுமாய்
இருக்கிறாய் என்னுள் !
-
மனிதன் வரையறுத்த
செயற்கை எல்லைகளைக்
கடந்து உலகம் முழுமைக்கும்
எல்லா உயிர்களுக்கும்
உங்கள் பேரன்பை
விதைத்துச் செல்லுங்கள்
நாளைய தலைமுறை
அன்பின் நாற்றங்காலில்
விளைந்த கனிகளை
அறுவடை செய்து
கொள்ளட்டும்.-
மனிதன் வரையறுத்த
செயற்கை எல்லைகளைக்
கடந்து உலகம் முழுமைக்கும்
எல்லா உயிர்களுக்கும்
உங்கள் பேரன்பை
விதைத்துச் செல்லுங்கள்
நாளைய தலைமுறை
அன்பின் நாற்றங்காலில்
விளைந்த கனிகளை
அறுவடை செய்து
கொள்ளட்டும்.-
என் அன்பிற்கான
தோற்றுவாய்
நீ என்பதால் என்னவோ
உன்னிடம்
தோற்று நிற்பதில்
எனக்கு எப்போதும்
பெரும் சம்மதம்-
என் அன்பெனும்
நீர் பாய்ச்சலில்
இவள் பாத்திக்கு
மட்டும் கூடுதல் நீர் ❤️-
ரயில் பயணம் ! வழக்கம் போல் நெரிசல் .
ரயிலிக்கே உண்டான ஒரு வாசம்.
துண்டுகளும் கைக்குட்டைகளும் இடம்பிடித்துக் கொண்டிருந்தன.
ஜன்னல் வழி ரிசர்வேஷன்களாக
இறங்கியவர்களை இறங்கவிடாமல் இடைமறித்து
இன்னல்களீந்து இடம்பிடித்த இனிய பயணிகள் ?
ஒரு வழியாக மேலே,கீழே என்று தனக்கும் தன்னுடமைக்கும் இடமமைத்து அமர்ந்து பயணத்திற்கு முந்திய அந்தப் பயணத்தில், பல சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரப் பயணம்..
பிஸ்கட்,கடலைமிட்டாய் ,தண்ணீர் பாட்டில்,சமோசா,சாப்பாடு, கீ செயின் ,பர்ஸ், திருநங்கை அக்காக்கள் என்று பலர் கடந்தும் நடந்தும் சென்ற வண்ணம் இருந்தனர்.
அவர்களுள் ஒருவராக பாப் கார்ன், பாப் கார்ன் என்று உரக்க கத்திய வண்ணம் ஒருவர். கர்சீப் கர்சீப் என்று ஒரு அண்ணா.
சிலதை விற்று அவர் கடந்த பின்னும் சிறிது நேரம் எதிரொலியாக பெட்டிகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது அவரொலிகள்
கர்சீப் அண்ணா திடீரென "பாப் கார்ன் பாப் கார்ன்" என மாற்று விற்பனை செய்ய நெரிசல் பெட்டியில் ஓர் புன்சிரிப்பு
அவரும் நிலைமையுணர்ந்து ஐயையோ "கர்சீப்" என்றதும் சிரித்துக்கொண்டே வாங்க நினையாத என்னைப்போல் சிலரையும் கூடுதல் கர்சீப் வாங்க வைத்தது அந்த நிகழ்வு-
நல்லை அல்லை சகி
சொல்லை அழகாக்கிவிட்டு
இல்லை என்கிறாள் -
முல்லை எனப் புவியில் பூத்துவிட்டு
ஏனைய பூக்களுக்கு தொல்லை ஆகிறாள்
அழகென்ற சொல்லை
அழகாக்கிவிட்டு அழகில்லை என்கிறாள்.
காதல் வில்லை நாணேற்றி
விட்டு நான் இல்லை என்கிறாள்.
அன்பின் எல்லை எதுவெனக்
காட்டிவிட்டு அது நானன்று
என்று நாணுகிறாள் - என் மனக்
கல்லை பேரன்பின் சிற்பமாக்கி
விட்டு நான் இல்லை என்கிறாள்.
இல்லை இல்லை என்று
சொல்வதில்தான் நீ
முழுவதுமாய் இருக்கிறாய் சகி
-