வாழ்க்கையின் தேடல்  
38 Followers · 8 Following

தமிழரசன் தம்பி❤
Joined 10 December 2018


தமிழரசன் தம்பி❤
Joined 10 December 2018

ஊடகம் உண்மையை உரைத்தால்
ஊழலும் ஊர் விட்டு ஓடும்
நாடகம் கதையின்றி வாடும்
மக்கள் தேடலும் வரும்
தலைமுறையை கொண்டாடும்

-



உதடுகள் இருக்கு
அதன் உரிமை மட்டும் எனக்கு
உணர்வுகள் கிறுக்கு
அதன் காதல் என்றும் உனக்கு
தனிமையில் கிடக்கு
இது காலம் தந்த கணக்கு !

-



குருதி தன்னை மண்ணில்
புதைத்து கொண்டாலும்
துரோகத்தால் வன்மத்தால்
அதிகாரத்தால் ஒடுக்கப்பட்ட
எம்முயிரின் குறல்கள்
ஒருநாளும் உறங்காது

-



உருகுநிலையின் ஊற்றை
தாங்கும் விழி
எம் சோழனின் கல்லனையை
காட்டிலும் வலிமையானது

-



தூங்காத இரவுக்கு
காவலாய் பிறை
அது தேய்ந்தப்படி
நானும் தேய்கிறேன்
திகட்டாத நினைவுக்கு
கண்ணீரில் சிறை
அது வீழ்ந்தப்படி
நானும் வீழ்கிறேன் !

-



அடைபனியில் உறைந்துபோனதடி
நீ கடந்து போன உயிரும்
நான் சேர்த்து வைத்த நினைவும்

-



யாரோ தீட்டிய ஓவியத்தில்
வர்ணங்களாய் நானில்லை
தீரா பசிக்கு முற்றுப்புள்ளியை
காணாத கிறுக்கன்

-



கனவிலும் கனவாய் போகிறேன்
நிஜத்திலும் நிழலாய் ஆகிறேன்
வேடத்தை வேடிக்கை பார்க்கிறேன்
பாடத்தை பயின்றே நகர்கிறேன்

வாழ்க்கையின் அர்த்தம் நாடியே
என்னை நானே தேடினேன்

-



கடல் நான்
வழிப்போக்கன் பயணிக்கலாம்
வாழ்க்கைக்கு பயனளிக்கலாம்

அலை நான்
அடங்காத அன்பால் ஆர்ப்பரிக்கலாம்
அமைதியை தேடும் சிறகு ஆகலாம்


கரை நான்
தனிமையை விரும்பும் இடமாகலாம்
தேடலை தூண்ட விதையாகலாம்

-



நீதி கேட்கும் மடையன்களுக்கு

நீதியின் வாக்கியம் ரசிப்பதற்கு மட்டும்

"சட்டம் மக்களுக்காக இயற்றப்பட்டது"

-


Fetching வாழ்க்கையின் தேடல் Quotes