#ஆணியம் #
பெண்ணியம் பாடும் பெண்கவிஞர்கள்
இங்குண்டு ஆணியம் பேசும்
ஆண்கவிஞர்கள் வெகு சிலரே...
(கீழே படிக்கவும்)-
அவர்களைப்
பொருத்தமட்டில்
அந்த ரோசியை
வாக்கிங் கூட்டிப்
போக மாட்டிய
சங்கிலியை
இறுக்கமாய்
பிடித்திருக்கும்
அவன் கைப்பிடியும்
ஆணாதிக்கம்தான்-
மனைவியின் அருமை
அவள் பிரிவில் தெரியும்
என்பதெல்லாம் கண்துடைப்பு
மனையாள் மறைந்தால்
மறுகணம் அவன் புதுமாப்பிள்ளை
என்பதே கணக்கு-
மனைவியை...
பத்தோடு பதினொன்று
என்று நினைக்கும் எல்லா
கணவன்மார்களுக்கும்
ஆழ்மனதில் நிச்சயமாக
மனைவி என்ற சொல்லின்
தனித்துவம் தெரிந்திருக்கும்...
ஏற்றுக்கொள்ள தான்
இடும்பை தடுத்திருக்கும்...-
ஆணின் பார்வையிலும் பெண்
பெண்ணின் பார்வையிலும் பெண்
பெண்ணுரிமை பெண் விடுதலை
பெண் பாதுகாப்பு என பெண்ணியம்
பேசி பேசி ஆணினத்தின் அடிப்படை
உரிமைகளைக் கூட அடியோடு பிடுங்கி
எறிந்து விட்டது இந்த நவீன சமூகம்!!!
இன்று நாட்டுப்புறம் தொடங்கி நகர்ப்புறம்
வரை எல்லாமே பெண்ணவள் கைக்குள்!!
மாதவிடாயும் மசக்கையும் பலவீனமல்ல
பெருத்த உடல்வாகும் மீசையும்
மட்டும் வலிமையுமல்ல...........
எல்லா உயிர்க்குள்ளும் ஆண்மையும்
உண்டு சிறு பெண்மையும் உண்டு....
வெறும் உடலமைப்பு கொண்டு
பிரித்து ஆண்டது போதும்!!!
பலம் படைத்த மனங்கள் தோள்மீது
பலவீனர்களைத் தாங்கி நடக்கட்டும்..!
நவீன சமூகம் இனி ஆணியம் பேசவும்
அடிக்கடி வாய்ப்பளிக்கட்டும்!!!!
- Nandhini Murugan
-
நான் ஆணாக இருந்திருந்தால்:
ஆண்மையை முழுமையும் உணராத பெண்களும் ஆண்மையை முழுமையும் உணராத ஆண்களும் படிக்க வேண்டிய பதிவு...
-
குட்டுப் பட்டாலும்
மோதிரக் கையால்
குட்டுப் பட வேண்டும்.
ஆணிற்கு பாராட்டு
என்பதும் ஓர்
அங்கீகாரம்
என்பதும் ஓர்
பெண்ணிடமிருந்தே
வர வேண்டும்.
அங்கீகரித்தமைக்கு
ஆண்களின் சார்பில்
அனேக வணக்கங்கள்
அன்பு தோழி!-
ஆணியம் கவிதை
இணைப்பு கீழே உள்ளது கேட்டு தங்கள் மேலான கருத்தினைப் பதிவிடவும் சகோ.-