ஆணழகு....
👇👇👇👇-
அத்தான்னு சொல்லாதடீ
அடிச்சிருவேன் பாத்துக்கனு
ஆணவத்தில
நீ மறச்ச
நாணத்திலதான்
நான் விழுந்தேனடா
ஆணழகா!-
உலகமே என்னை
சிறந்த புகைப்படக்கருவி
என்றது...
தெரியாமல் சிமிட்டிவிட்டேன்
உன்னைக் கண்டதும்
கண்களை!
-
என்னவன் மேல் மட்டும்
எனக்கு அவ்வளவு காதல்,
ஏன்னென்றால் அவனின்
ஒற்றை கள்ள சிரிப்பில்
மொத்தமாய் கரைகிறேன்,
அவன் வருகைக்காக
மட்டுமே வழிமேல்
விழிவைத்து காத்திருக்கிறேன்!!!-
ஆணழகன் என்று
எனைக் கேட்டால்
யாரைச் சொல்லிடுவேன்
அவரைத் தவிர
அப்பா❤
-
அழகுச் சிரிப்புக்கு சொந்தக்காரா!
ஆசையைத் தூண்டும் ஆணழகா!
இலக்கணம்மாறா இதழழகா!
ஈழம் தந்ந தமிழழகா!
உலோகக் காந்த கண்ணழகா.!
ஊர் வியக்கும் பேரழகா!
எனை ஈர்த்த
ஏகாந்தனே என்சொல்வேன் உன்னழகை
ஐ என்ற
ஒற்றை எழுத்தும்
ஓரளவுதான் உனைவிளக்கும்!
ஔவியம் ஐக்கும் உன்னில் ஏனோ!
📝ஜீவி தமிழ்😍...
-
கண்டவுடன் கட்டியிழுக்கும்
கண்ணுமில்லை
பேதையும் பொறாமை கொள்ளும்
பேரழகுமில்லை
அடர்வனமென விரவி கிடக்கும்
குறுந்தாடியுடன்
கரங்கள் முறுக்கி விடும்
கட்டழகு மீசையுடன்
கன்னியின் மனதினை
கொள்ளைக்கொள்ளும்
ஆணழகன் அவன்!!!
-
ஆணழகன் 😍
கட்டுமஸ்தான உடலமைப்பும் , மின்சார பார்வையும், குழந்தை சிரிப்பும் , கம்பீரமான நடையும் ,கார்மேக கண்ணனை போல் அனைவரையும் தன்வயபடுத்தும் பேச்சி திறனும் , பெண்ணானவள் கிடைக்க பெற ஏங்கும் குணத்தையும் கொண்டவன்
என்னவன் 💞🥰-