HAPPY HUSBAND DAY
ஒற்றை உலகமாய் நீ இருக்க ....
இரண்டு பொழுதுகளாய் உன் நினைவில் நான் இருக்க....
மூன்று காலங்களை மறந்து ...
நாற்திசையிலும் நின் முகம் கண்டேன் .... என்
ஐம்புலன்களையும் உந்தன்
ஆறடி உயரத்தில் அபகரித்து...
ஏழு அதிசயம் தான் என்றிருந்தவளை...
எட்டவதாக உன் காதலை அளித்து ...
ஒன்பது கிரகங்களும் சேர்ந்து ..
பத்திரமாய் சேர்த்தது உன்னை என்னிடத்தில் என் கணவனாக ....🥰💞🥰💞
-
🔥Writing on my own thoughts
🔥 Comment on your suggestions about my ... read more
BLACK DAY 🥀
எங்கும் காதல் , எதிலும் காதல் 😍
நபர்களின் மீது தான் காதல் வருமா என்ன? தன் சொந்த நாட்டின் மீதும் காதல் வரும் ..அளவற்ற காதல் ..❣️அவள் என்னவள் என்ற கர்வத்தின் அடையாளமே ..நம் பாரத நாட்டின் மீது ஒவ்வொரு வீரர்களும் கொண்ட பற்றற்ற காதல் 🥰🥀அவள் (பாரத நாட்டின்) மீது கொண்ட காதலின் வெளிப்பாடே ..ஒவ்வொரு அந்நிய தாக்குதலின் போதும் தன் உயிர் போகும் என தெரிந்தும் முதலாய் போய் நிற்பவர்கள் ..அப்படியான வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாள் ..🙌❣️-
HAPPY VALENTINES DAY
உலக அதிசயங்கள் ( feb7)ஏழாம்🙃
எட்டாவது (feb8)அதிசயமாக நம் காதல் இருக்க 😇
ஒன்பது(feb9) கிரகங்களும் சேர்ந்து 🌌
பத்து (feb10)பொருத்தங்களையும் நமக்கு அளித்திட 🥰
பதினொரு(feb11) வகை மேளங்கள் அமைத்து 🥁
பன்னிரெண்டு (feb12)வகை அறுசுவைகளையும் செய்து 🍜
பதிமூன்றாயிரம்(feb13) பேருக்கும் மேல் நம்மை வாழ்த்திட 😍
பதினான்கு(feb14) வருட காலங்களை கடந்து நம் காதல் நிலைத்திருக்கும் படியாக ❣️
என்னவன் உன்னோடு சேர்ந்து பயணிப்பேன் என்றும் உன்னவளாக🥰💞-
HAPPY KISS DAY
எத்தனை முத்தங்கள் இட்டாலும் என்னவனின் ஒற்றை நெற்றி முத்தம் கொஞ்சம் கிறங்கத்ததான் செய்கிறது இவளை ..😇🥰-
HAPPY HUG DAY 💞
என் சந்தோசத்திலும் சரி ....,
என் துக்கத்திலும் சரி...,
என் மனதில் ஓடும் ஆயிரம் என்ன ஓட்டங்களுக்கும் கிடைக்கும் ஓர் தீர்வு யாதெனில் ..அவனின் ஒற்றை அரவணைப்பு 🥰
என்னவனின் தோல் சாயும் போதெல்லாம் அனைத்தையும் மறந்து அவனின் அவளாக மிளிர்கிறேன் 😇...அவன் செய்யும் காதலில் 💞❣️-
HAPPY PROMISE DAY
கண்களால் கவர்ந்து ..
இதயத்தில் நுழைந்து ..
காதலில் கலந்து ....
இருவரும் ஒருவரானோம்❣️
என்னவனே ! நீ சிறகை விரித்து பறந்திட வானமாய் நம் வாழ்க்கை இருக்கின்றது ..உன்னை உயர பறக்க வைக்க உதவும் காற்றாய் உன்னவள் நான் எப்போதும் உடன் இருப்பேன்..💞✌️-
Happy chocolate day 🍫
எத்தனை விலையுயர்ந்த சாக்லேட் கள்🍫 ஆனாலும் .....அனைத்தும் அதன் மதிப்பை இழக்கதான் செய்கின்றன என்னவனிடம் இருந்து பெரும் போது 😘🥰-
HAPPY PROPOSE DAY
(அ)ன்பிற்கும் , (அ)ழகன் என்ற வார்த்தைக்கும் உருத்தான
(ஆ) ண்மகன் என்னவன்...
(இ) ன்றளவும் குறையவில்லை
(ஈ) ன்றவர்களின் அன்பை
(உ) ன்னிடத்தில் பெறுவதில்
(ஊ) ன்றுகோலாய் நீ இருக்க
(எ) ட்டாத உயரத்தையும் எட்டி பிடிக்கிறேன்
(ஏ) ணி இல்லாமல்
(ஐ) யம் ஏதும் இன்றி
(ஒ) ருவருக்கொருவர்
(ஓ) யாது சண்டையிட்டாலும்
(ஔ) டதம் என்னும் காதலால் நம் வாழ்வை அலங்கரிப்போம் ...
வா....அன்பே ❣️💞-
புற தோற்றத்தில் முட்கள் நிறைந்த காம்பினை போல தோற்றமளித்தாலும் பெண்ணானவள் கிடைக்க பெற ஏங்கும் ரோஜாவின் மெல்லிய இதழ்களை போன்ற அகத்திணை கொண்டவன் என்னவன் ....🌹❣️-
செய்கிறது அவ(ளி)னிடம் சொல்ல நினைத்த I LOVE YOU என்ற மூன்று வார்த்தைகளை வெக்கத்தை விட்டு சொல்லிய நிமிடங்கள் ...😇💞-