இதயத்தின் உணர்வினை
இதழ்வழி உரைத்து
உறவாய் கேட்கிறதே...-
உன் விழி உதிர்க்கும்
கண்ணீரில்
என் நெஞ்சம் நனையுதடி
என் உயிர் நீயென
புத்தியும் உரைக்குதடி
கல்லாய் இருந்தவனுள்
வேரூன்றி படர்ந்தவளே...
பத்திரமாய் பாதுகாக்க
பொக்கிசமாய் கிடைத்தவளே
கரம் பிடித்த கணம் முதல்
நாடி கலையும் நொடி வரை
இமைப்போல் காப்பேனடி...
இருளுக்கு அஞ்சி
கலங்காதே கண்மனியே!!!-
உயிரினை தேய்த்திடும்
அவள் பார்வைக்குள்...
ஆயுள் கைதியாய்
அகப்படுவேனோ!!!
-
அன்பும் அக்கறையும்
அவன் அரவணைப்பில் திளைத்திடாது
அணு அணுவாய் ஏங்கி தவித்திடும்
உயிரொன்றின் வலி அறிவாயோ....-
காதலெனும் ஒர் உறவுக்குள்
அன்பெனும் சிறையினில் அகபட்ட
ஈர் உயிர்கள்....
-
வெக்கை சூழ்ச்சியில்
பிணைந்திருக்கும் தாயவளை
வேனிற் சினம் தனித்து
குளிர்விக்க வந்தாயோ....-
கானல்நீரென கரைந்திடும்
காட்சிப்பிழைதனில் திளைத்திடாது....
மனம் சுவாசிக்கும் பொழுதினில்
அன்பே நீ வேண்டும்!!!!
வழி துணையாயின்றி
வாழ்க்கை துணையாய்....-
நாற் விழி பாதையது
எதிரெதிரே பிணைந்திருக்க....
காதல் காவியத்தை
சித்தரிக்கும் மனமதில்
புதைந்திருந்த வார்த்தையாவும்
வாய்மொழியினிற் உரைக்காது
இதழ்வழி மலர்கின்றன!!!!
முன் நெற்றி விளிம்பினில்
முத்தமாக.....
-
காணும் நொடியினில்
காதல் ஒன்று கண்டேணோ....
விழி வழி மூழ்கிய நின் முகமும்
அச்சாணியாய் பதிந்ததடா....
இமை மூடி மறந்திட மறுத்து
தொலைகிறேன் உன்னில்....
உனதவளாய்!!!!
-