ஏதுமில்லையென உதடுகள்
சொன்னாலும் ஏதோ ஒரு அன்பின்
அழகிய உணர்வை மனம் இங்கு உளறிக் கொண்டே தான் இருக்கிறது...-
இந்த நாள் இனிய நாள்
உன் குரல் பூமியில்
ஒலித்த நாள் இன்று
எங்கள் மனதில்
ஆனந்தம் கண்ட நாள்
எங்கள் வாழ்க்கையை
அழகாக மாற்ற தோன்றிய
தேவதை நீ
இன்று போல் என்றும் ஆனந்தம் ஆக வாழ்க்கையை வாழ வாழ்த்துக்கள் 😘😘🥰-
பாதி வெளிச்சமும் பாதி இருளையும் தரும் நிலவைப் போல.
பாதி சிரிப்பும் பாதி அழுகையும் தரும்
அழகான உறவு அவள் 🌹-
குழந்தைகள் வாழும் உலகம்,
புதுலகம்...
தனியுலகம்...
விதிமுறையில்லா அழகிய உலகம்...
எனினும் நமக்கங்கே
அனுமதி இல்லை...-
அழகியே தீவே!!
விண்மீன்களிடம் வீம்பாய்
கதைப்பேசி
கற்பனையெல்லாம்
கச்சிதமாய்
கவிகளிலே
வடிவமைக்கும்
ஆனந்த பெண்ணாகவே
வலம் வந்திடுவாய்
என்றென்றும்.....-
கண்களால் கட்டி இழுத்து..
கைது செய்யாதே முரடா..
கர்வப்பட்டு போகிறேன்..
இந்த காந்த கண்களுக்கு..
சொந்தக்காரி நானென்று..-
உனக்கு பிடிக்கும் என்பதற்காகவே
பூமுடித்து பொட்டு வைத்த நீ,
எனக்காக மட்டும் பூமுடித்து
பொட்டு வைப்பதும்,அதற்கு
என்னையே அழைக்கும் காலம்தான்
எக்காலம்,
அதுவே என் வாழ்வின் பொற்காலம்..,-