கண்டா வர சொல்லுங்க
கடவுளிறைவனாண்டவரை...
🕉☪✝
-
எத்தனை நிறம்,
எத்தனை வடிவமுடைய
பொட்டு வேண்டுமானாலும்
வைத்துக்கொள்,
உன் நெற்றிப்
பொட்டினை மட்டும்
என் வாழ்நாள் மட்டும்
நான்தான் வைத்துவிடுவேண்
உனக்கு,
அத்தனை உரிமையையும்
நீதான் கொடுக்கவேண்டும்
எனக்கு...,-
அதிக பட்டப்படிப்பு
படித்து முடிக்க
தெரிந்த உனக்கு,
என் மனதை படிக்கும்
கேள்வி ஞானம்
மட்டும் இல்லையா
உனக்கு........,-
நாம் தமிழர் கட்சி
அதிக தொகுதியில்
முன்னிலை என்ற
வார்த்தைகளை
தொலைக்காட்சிப்பெட்டியில்....,-
அந்திப்பொழுதுகளிலும் கூட அன்பே
மந்திக்கூட்டம் போல் உன் நினைவு
உந்தித்தள்ளுகிறது என்னை....,-
என்னுள் அருகி வந்த
ஆசையெல்லாம் - நீ
அருகில் வந்து நின்றபின்னே
பெருகிப்போகும் மாயம்தான்
புரிவதில்லை
பூங்கொடியே....🥰🥰🥰-
நீ குழம்பியுடன்
வந்து நின்ற
வேளையில் சற்றுக்
குழம்பித்தான்
நின்றிருந்தேன்,
உன் தங்கைதான்
மணப்பெண்ணோ
என்று...,🤩🤩😍😍🥰-
பனித்துளியா
கண்ணீர் துளியா
என்ற ஆராய்ச்சியில்
உன் முகப்பரு
என் மூளைக்கு
முழு ஆண்டு பரீட்சை
வைக்கிறது எனக்கு
அவ்வப்போது....,-
ஆதாம் ஏவாளால்
பயிரிடப்பட்ட
காதல் வாழைமரம்
வாழையடி வாழையாய்
விருட்சமாய்
வாழ்ந்துகொண்டிருக்கிறது
இளைஞர்களின்
இதய வயலில்...❤❤❤
-
அன்பை
அனைவரும்
பெற்றெடுக்கலாம்,
ஆனால்
அனைவராலும்
சிறந்த முறையில்
வளர்த்தெடுக்க
முடிவதில்லை...,-