அறிவை விரிவு செய்யவும்,,
திறமைகளை வெளிப்படுத்தவும்,,
உபயோகப்படுத்தப்பட்ட வேண்டிய...
சமூக ஊடகங்களும், பல செயலிகளும்,,
தற்பொழுது ,,
வகை, தொகை இல்லாமல்..
அசிங்கமாய் கொஞ்சுவதற்கும்..
தரமற்று தாழ்ந்து போவதற்கும்..
உபயோகமாகின்றன..
ஒரு சில நடத்தை கெட்டவர்களின்..
செயலால்..
ஒட்டு மொத்தமாய் சமூகம் சீரழிகிறது..-
மலரினும் மெல்லிய மர்மத்தை,
மனம் போன போக்கில் வாரி
இறைத்ததில்,
நிலைகுலைந்து போய் கிடக்கின்றன,
நிர்வாணமாக்கப்பட்ட
வார்த்தைகளின் பின்,,,,
அழகாய் ஒளித்து வைக்கப்பட்ட
சில அழகான ரகசியங்கள்.-
தேவையென்றால் மட்டுமே தென்படுகிறார்கள்
சில உயர்வான மனிதர்களுக்கு
கீழ்மட்டமான மனிதர்கள்.
அசிங்கங்கள் அகத்திலே வாழ்கின்றன...!!-
காலம் கடந்தும்,
கரை சேராத
களங்கம் கொண்ட உள்ளங்களின்,
கழிவுகளை வாரி,
ஒருவர் மேல் ஒருவர்
இறைத்து இன்புற..
வடிகால்களாய்,
பல செயலிகள்..
அதில்..
அளவுக்கதிகமாகவே பூசப்படுகிறது
நட்பென்ற பெயரிலான
அசிங்க அரிதாரங்கள்..
-
திருடனுக்கு தேள் கொட்டினால்
திண்டாட்டங்களை மறைப்பது இயல்புதான்...
என்னைக் கொட்டிய தேள் அதிசயமானது
அறவே வலியில்லை என
நடிப்பதுதான் இழிவு !-
அவமானங்கள் எல்லாமே
நம்மை அளந்து
கொண்டே இருக்கும் ;
ஆயுள் கருவிகள்!-
நாகரிகம் என்ற
பெயரில் இளைய
தலைமுறையினரின்
வாழ்க்கை தடம்
மாறுகிறது
தொலைக்காட்சியால்.....-
மிருகங்கள்கூட செய்யாத அசிங்கம்
மனிதனுக்கு செய்ய தெரியும்
துரோகம்-
அதிர்ஷ்டம் இருப்பவர்கள்
அதிர்ஷ்டம் இல்லாதவர்களிடம்
தன் அதிர்ஷ்டம் பற்றி
பேசாமல் இருப்பதே நன்மை...
மீறி பேசினால்
அதிர்ஷ்டம் இல்லாதவனுக்கு அது
சங்கடம் ஆகிவிடும் ....!
அதிர்ஷ்டம் இருப்பவனுக்கு அது
அசிங்கம் ஆகும்....!-
அழுக்குத் துணியால்
அழுக்கைத் துடைத்தால்,
ஒருபோதும் அழுக்கு போகாது!
அதுபோல தான் சரியாக இல்லாமல்
யாரையும் சரிசெய்ய இயலாது!-