உன்னோடு
இருந்த
வாழ்வின்
சில
நேரங்கள்
உறைந்த
மணித்துளிகள்
என்றும்
மறவா
பொக்கிஷங்கள்...
-
மனம் சொல்லும்
மொழியின் அர்த்தங்கள்,
உன் இதழ் தந்த
முத்தத்தின் அர்த்தங்கள்,
உன் விழி சொல்லும்
பார்வையின் அர்த்தங்கள்,
விரல் தொடும்
ஸ்பரிசத்தின் அர்த்தங்கள்,
எல்லாம் காதலாகவே
மொழிபெயர்க்கிறேன்,
காதலும் காமமும்
உன்னோடு என்றதும்
காத்திருப்பும் இங்கு
காவியம் ஆனது.— % &மனம் சொல்லும் மொழியின்
அர்த்தங்கள்,
உன் இதழ் தந்த முத்தத்தின் அர்த்தங்கள்
உன் விழி சொல்லும் பார்வையின் அர்த்தங்கள்
விரல் தொடும் ஸ்பரிசத்தின்
அர்த்தங்கள்
எல்லாம் காதலாகவே
மொழிபெயர்க்கிறேன்
காதலும் காமமும் உன்னோடு
என்றதும்
காத்திருப்பும் இங்கு
காவியம் ஆனது.— % &-
இருதயத்தின் ஓரத்தில்
எட்டிப்பார்த்த ஆசை ஒன்று
இனித்திடும் தேனாக
மனம் நிறைத்து
நினைவுகள் சூழ
நீங்காத நினைவாக
என்னை கட்டிப்போட்டது
காதலாய் உன்
கண்களில்...-
நிலவின் ஒளியில்
நீந்திடும் அலையாக
என்னுள் கனத்திடும்
உந்தன் காதல் - என்
தனிமைக்கு கொஞ்சம்
தடை போடுகிறதே...-
தென்றல் காற்றும்
இன்னிசை பாடலும்
சேர்ந்து இசைக்கையில்
சுவாசமும் ஏழு
ஸ்வரங்கள் ஆகிறது-
விடுபட்ட வார்த்தைகளெல்லாம்
மறைக்கப்பட்டவைகளாய்
மறுக்கப்படுகிறது
மங்கைஇவளின் மனதில்-
சில்லறையாய் சிதறும்
சிரிப்புக்கு மத்தியில்
சிந்தனைக்கும் கொஞ்சம்
இடம்தரச்செய்யும் நட்பூக்கள்
என்றும் வரமே....-
நட்சத்திர கூட்டத்தின்
நகர்வலம்
நீயும் நானுமாய்
சேர்ந்துக்கொண்டோம்
கைகோர்த்து நாமும்
வானவீதியில்....-
புவிஈர்ப்பு விசையும்
தோற்றுப்போனது
உன்
விழிஈர்ப்பு விசையின்
ஈர்ப்பு விசையில்
அவனதிகாரம்...-
தனித்திருக்கும்
போதெல்லாம்
உன்னை
நினைத்திருக்கிறேன்
உன்
நினைவுகளின்
மழையில்
நனைந்துகொண்டே...-