karthi keyan   (Kharthikeyan)
293 Followers · 399 Following

Mechanical engineer
Joined 3 September 2017


Mechanical engineer
Joined 3 September 2017
15 SEP 2024 AT 22:35

இரவுகள் யாவும் யோசித்து தீர்ந்த போதிலும்
நினைவுகளின் சுவடுகள் தீரவில்லை
எனினும் கடந்து போகவும் மனமில்லை
நிஜத்தினை மறந்து நினைவுகளுக்குள் போகிறேன் ....

மீண்டும் என் நிஜத்தினை மீட்டு வர.....! 

-


29 AUG 2023 AT 22:13

In the sessions of rainy seasons,
Dark rain clouds may scarier,
Thundershowers may scary,
But in deep down
Undrained rain water of streets are scariest....!

-


30 MAY 2023 AT 19:44

இலை மீது தவளை ஒன்று
இறை தேடி காத்து கிடக்க
காத்து இல்லா சூழலில் வானம் அது கரு மேகம் கொள்ள
மெல்ல மழை அது குளத்தில் விழ
தண்ணீர் தறை என திடம் என இருக்க
முத்துக்கள் குதித்து போல மழை துளி குதித்திட
மின்னல் வெட்டி இடி கொட்டி முடிக்கும் முன்பே
மீனை கைப்பற்றி மழை சாரல்களை பூ தூவலில் நின்ற ராஜா போல திருப்தியை கொண்டது தவளை....!

-


22 JAN 2023 AT 23:18

நடு இரவில் காத்து கிடக்கும்
ஒருவனுக்கு ஒளி உமிழும்
வீதி விளக்கு கூட
இருள் நடுவே
ஓர் வெளிச்ச நிழல் தான்....!

-


11 OCT 2022 AT 23:22

தூங்கா நகரின் நினைவுகள்....
தூங்கும் நேரத்திலும் துடித்து கொண்டிட...
கொண்டாடப்பட்ட பொழுதுகள்....
விழுதுகள் என மனத்தில் படர்ந்திட....
அடர்ந்த மனித காட்டில்
மாயைகளில் மாட்டி கொண்ட....
மனம் அது மகிழும் மண்ணிடத்தில் கால் பதிக்கும் நாள் தேடி காத்துகிடக்கிறது....!

-


1 AUG 2022 AT 5:12

பேச கூட சந்திக்க வாய்ப்பு இல்லா பெண்ணே...
இன்னொரு இணை பிரபஞ்சத்தில்
நீ கசாப்பு கடைக்காரனாகவும்
கறிகடை அருகில் நான் நாயாக காத்திருந்தால் கூட...
அப்போதும் நீ சிறு பகுதி இதயத்தை தரமாட்டாய்...!

-


26 JUL 2022 AT 22:35

பகலில் என்னோடு திரிந்த நிழல் கூட இருளில் ஓய்வில் இருக்க
சட்டை பையில் இருக்கும்
திறன் பேசி திணறாமல்
சாத்தானாக என் தூக்கத்தோடு
சண்டையிடுகிறது
என் இரவுகள் போராட்டகளமாகிறது....!

-


20 JUL 2022 AT 21:52

Everydays are always on moving
But all days are with thinking...
About more Qualitative Love and
More Quantitative Money
However reality reminds me
those are may be Tentative....!

-


18 JUL 2022 AT 21:50

அவளிடம் பேசிவிட்டேன் லட்சம் வார்த்தைகள்
கற்பனையில்
ஒத்திகையாக...
அவளிடம் பேச போகும் ஓர் நாளுக்காக...!

-


18 JUL 2022 AT 6:26

அவளும் பெண் தான்
அதித ஒப்பனையும் வாசனையும்
பேருந்தில் இடம் தேடி உலவியபோது
அவளை ரசிக்க நினைத்தவனையும் பயக்க தலை குனிந்திட செய்தது
ஒரு குறும்பு சிறுவனின் யதார்த்த கைத்தட்டல் சத்தம் ...!

-


Fetching karthi keyan Quotes