குடையை
மறந்தாயென நினைத்தேன்
குழந்தையாய்- நீ
மாறிப்போனதை
மறந்து...-
எங்களின் குழந்தைக்காக வாங்கிய
பொம்மையை, அவளின் குழந்தையிடம்
குடுக்கும் தருணத்தில்,
மூவரும் பரிமாறி கொண்டோம் புன்னகையை, வெவ்வேறு அர்த்தங்களுடன்-
கையில் ஏந்தி,பதமாய் கட்டிலில் சாய்த்து,
நள்ளிரவு வரை கதை பேசிய,
கலைப்பில் கண்ணுறங்கிய தாத்தாவும்
எனக்கு குழந்தையே 🎅👶-
தன்னந்தனியாய் கரு கூட்டில்
ஓர் உருவம்
வெளிபட்ட சில நொடியில்
காரிருள் மாற
கீச்சிட்டது அழு குரல்..-
நான் தீட்டாத கவிதை
நான் பேசாத ஓவியம்
நான் காணாத இசை
நான் கேளாத தென்றல்
நான் உணராத காவியம்
ஒளிரும் நிழல்
உடன் வரும் நிஜம்
இமைக்காத ஈர விழிகள்
வலிகள் சுடும் இதயம்
காத்திருக்கிறேன் வருட வா 👶🏻😘...
-
ஓர் குழந்தை போல் ஆசை பட கற்றுக்கொண்டேன் ... விலை உயர்ந்தவை .. நிறைய இருந்தும் மனதிற்கு பிடித்ததை ..தேடி எடுப்பது .. !!!
-
என் முகத்தில்
பல பெண்களின்
செவ்விதழ்களை
நகல் எடுக்க...
ரோஜாவை போல்
செக்க சிவந்த
முகம் கொண்ட
குழந்தை
பருவத்துக்கு
மீண்டும்
பயிணிக்க வேண்டுமோ— % &-
குழந்தை
மழலையின் மொழி கேட்க ஓடிவந்தேன்
கானல்நீர் போல் அங்கும் இங்கும் உலாவருகிறது
கடவுளின் மறுபிறப்பாக கூறப்படும் நீ!
அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து செல்கிறாய்!
எந்த ஒரு கஷ்டமும் இன்றி உன்
புன் சிரிப்பால் அனைவரின் வலிகளை தீர்க்கிறாய்
என்னால் இப்பொழுது உணரமுடியாத
ஒரு உணர்வு நீ உன் குழந்தை பருவத்தில்
காண்பிக்கிறாய்!
நான் இழந்த அந்த தருணங்களையும்
உன்னால் நான் புதுப்பிக்கிறேன்
இப்பொழுது ஏங்குகிறேன் என் குழந்தை
பருவத்தை திரும்ப பெற
குழந்தை இறைவனின் ஒரு அற்புத படைப்பு!-
உன் ஒற்றைக் கண் சிமிட்டலில் என் இதயத்துடிப்பை திருடி விட்டாய் அடா!!
என் குட்டி இளவரசனே🤴-
சந்தை
சிறுசிறு பேச்சுக்கு பழகிய வாய்க்கு பவுசு கம்மி.விலை சரியோ தப்போ கூவும் இடத்தில் கொஞ்சம் கூட்டம்தான்.பானிப்பூரிக்கடை வைத்திருக்கும் பீகார் தம்பிக்கு நன்றாக கல்லா கட்டுகிறது;எதுத்த கடை பஜ்ஜிபோண்டா மாதவனுக்குத்தான் பொறாமை,வாண்டுகளையெல்லாம் கொஞ்சம் பிடித்துவிட்டானென்று.மென்று துப்பியபடி அடுத்த நாலு நாளைக்கான வெத்தலையை வாங்கிக்கொண்டிருந்தாள், பரிமளாப்பாட்டி. "திராட்சை கிலோ பத்து ரூபா,கிலோ பத்து ரூபா" என்று இடைவிடாமல் ஒலிக்கிறது சின்னயானை வண்டியில் கட்டியிருக்கும் ஒலிப்பெருக்கி.பருப்பு,உளுந்துக்கு பேரம் பேசுபவர்களை கண்டாலே லேசான எரிச்சல் மளிகைக்கடை முருகனுக்கு.விதவிதமான காய்கறிகளை ஆவலாய் பொரிக்கிக் கொண்டிருந்தாள் முதல்முறை சந்தைக்கு வந்த ராஜி.கூச்சலுக்கு வண்டிச்சத்தம் கூடுதல் ஜதி சேர்க்கிறது.இரைச்சிக்கடை எலும்புத் துண்டுகளைப் பங்கு போட்டுக்கொள்வதில் நாய்களுக்கிடையே முறைப்பு.காலேஜ் முடிந்து திரும்பும் பெண்களை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தது சந்தை பஸ்டாப் இளைஞர்கூட்டம்.அத்தனையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சந்தைக்கடைசியில் நின்றிருந்த ஐஸ்வண்டிக்காரனிடம் ஐஸ் வாங்க ஓடினான் குமார்.-