தூவானம் தூரிச் செல்ல,
கால்கள் காரிருள் கானகம் புகுந்ததே,
மிளிரும் மின்மினி கண்டு
மலரும் மலர்கள் கண்டே, என்
முகமும் மலர்கிறதே!!!
வலிகள் மறந்தே!!!-
I scribble what I wanted to have or what I have
அன்பை விட கொடியது எது?
காரணி இல்லா அன்பு உண்டோ?
உறவும் உணர்வும் கடந்து, எவ்வுயிரோ
"அ" என்றால் "ஏ" என பதறும்
இளகிய இதயம் தான் உண்டோ?
உண்டெனில், நிலையில்லா வாழ்வில் பிறர் இன்ப துன்பங்களை எள்ளி நகைத்திடும்
காலன் வாகனங்களுக்கு மத்தியில்,
காரணி இல்லா அன்பு கொடிது!!!-
வலிகள் தந்த பின்னும் விழிகள் ஏங்கி கலங்கும்!!!
நொடிகள் நகர்ந்த பின்னும் மௌனம் களையா தருணம்!!!
வருடிச் சென்ற காற்றில்,
மண் வாசம் கண்ட பின்னும்,
உன் கார் கூந்தல் வாசம்
என் சுவாசம் நிறைத்ததடி!!!
வானவில் அதை பார்க்கையில்,
அவள் புருவம் என் கண்களில் மிளிரும்!!!
வளர்பிறை அது வளர்கையில், அவள்
புன்னகை என் கண்களில் சிரிக்கும்!!!
தேடிச் சென்று தென்றல் உன் தேகம் தீண்டிச் செல்ல
கண்ணில் நிறைந்த கனவே
கானல் நீராய் மறைந்தாய்
காதல் கொண்ட நானோ கவிதை தீட்டி நின்றேன்!!!
காரிருள் களைத்து நீயே கண் அசைவில்
கரம் கோர்த்திடடி!!!-
வாழ்விலும் மாற்றம் வேண்டி
வான் நிலா இரசித்தே
நீள் பயணம் செய்யும் நகரத்து
மின்மினிகள்!!! 😅
-
மனம் வருட
கார்மலி கரையில், குளிர்இரவில்,
காரிருளில்,
காலாற ஒரு நீண்ட
நடை பயணம்!!!
நீளும் கனவுகளும்,
நீங்கா வடுக்களும் மறந்தே!!!-
நேர்த்தியாக நகர்கிறேன்
கார்மேக ஓடத்தில் ஒளிந்து செல்லும் வெண்ணிலா போலவே!!!-
நீங்காத நீர்க்குமிழி நீ!!!
ஆர்ப்பரிக்கும் ஆர்கலி
அலைகளில் அகலாத அரண் நீ!!!
களையாத கனவுகளின் களஞ்சியக்
கார்மலி நீ!!!-
கலைந்த கனவுகள்
நினைவுகளில் துரத்திட
நிகழ் மறக்க
ஒரு கணம் சாய்ந்து கொள்கிறேன்...
காரிருளில் கார்மேக நிழலில் இந்த கூடாரம்
விடியலில் கானல் நீர் கூபாரம் கடக்கவே!!!-
விழிகளில் வலிகளும்,
வழிகளில் வடுக்களும்,
வருடிச் செல்லும்
வெண் நிலவொளியில்,
விலகிச் செல்லும் தென்றலே,
விரல் நுனி கணினி
கணம் மறந்து கவனி,
கவண் எறிந்த கல்லோ
கவின் அருவி தடுத்ததாம்,
கணம் மறந்து கவனி,
கனம் மறந்த அருவி
வனம் புகுந்ததே!!! காரிருள்
வனம் புகுந்த அருவி
கனம் மறந்த அருவி
மலைத் தேனொடு மருவி
சிறகடிக்கும் சிறு குருவி,
சிட்டுக்குருவி!!!
சிறகடித்த சிறு கதை கேள்
நறுவீ!!!-
இளகிடு மனமே!
துளிர்விடும் எண்ணம்,
மலர்ந்திடு மனமே!
உயிர்கொடு உணர்வே!!!
-