QUOTES ON #வேளாண்மை

#வேளாண்மை quotes

Trending | Latest
23 DEC 2019 AT 21:03

விவசாயி 👇👇👇

-


23 MAY 2020 AT 10:19

shal

-


12 DEC 2019 AT 23:02

வேர்வை துளிகளுக்கு

‌வேர்களோடு போராட்டம்...!!!



_ இளங்கவி ஷாலினி கணேசன்



முழு கவிதைக்கு 👇👇👇👇

-


21 JUL 2019 AT 16:33

#வேளாண் தொழில்....
# வேளாலன் நிலை....

வேர்வை சிந்தி வேளாண்மை
செய்பவனே தவிக்கிறான்
அதை குடித்து வியாபாரம்
செய்பவனோ செழிகிறான்

உலக மக்கள் உணவுக்கு
உனை நம்பி இருக்குது
முப்பொழுதும் உண்டாலும்
உனை என்றும் மறக்குது

அவன் கெட்டாலும் பெற்றாலும்
கொடுக்கும் விலை ஏற்கிறான்
அதை பயன்படுத்தி மற்றவனும்
அவனை என்றும் ஏய்க்கிறன்

உனக்குதவ இவுலகில்
எவ்வினமும் இல்லையே
கொடுதாலும் அதை நீயும்
பெறுபவனும் இல்லையே

அவன் பாட்டால் உன்வீட்டில்
தினம் உலையும் கொதிக்குது
அவன் உடைமைக்கும் உரிமைக்கும்
உலை வைத்து சிரிக்குது

அவன் மாமனிதன் என்றாலும்
ஈடாக மாட்டான்
கூலி இன்றி மெய் வருத்தி
கடவுளிடம் கேட்டான்....

-


16 OCT 2020 AT 21:58

சிறு நெல்லின் மணி,
வேளாண் வேர்வை துளியால்,
அறு வடைசெய்யப் பட்டு,
ஒரு குடிலின்அடுப் படி,
வர முத்திங்கள் கடந்தது-
தெரு வில்குப்பை யாகவல்ல!







-


31 JAN 2022 AT 23:17

தூங்குகிறது...
விவசாயிகளின் தோள்பட்டையில்
பாரதம்.


-



மலைகளை மலடாக்கி
மருதம் என்றலைத்தான்
உணவே மருந்தென்னும்
பாட்டானின் சொல்லில்
இயற்கையை புதைத்து
செயற்கை மருந்தோடு
அறுசுவை விருந்து
என்று சுவைத்தான்

-


22 FEB 2020 AT 7:49

பாதுகாப்பட்ட வேளாண்மை பகுதி யாதெனில்?

ஒரு பகுதி வேளாண்மை பாதுகாப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது என்றால் அந்த பகுதியில் வேளாண்மையை நேரடியாக பாதிக்கும் எந்த தொழிற்சாலை திட்டங்களையும் அனுமதிக்க இயலாது

-


5 DEC 2018 AT 10:08

வேளாண்மை:
உழைப்பவனின் வியர்வைக்கு மண் தந்த பரிசு வேளாண்மை விளைவுகள்

கிராமத்திலிருப்பவனோ நகரம் சென்று பிழைத்துக் கொள் மகனே என்கிறான்

நகரத்திலிருப்பவனோ இத்தூசியில் வாழ்வதற்கு தூய காற்றை சுவாசித்தபடியே வேளாண்மை செய் என்கிறான்

உன்னைத் தொடுபவனுக்கு வலிமை அதிகம்
நீயளிப்பதை உண்பவனுக்கும் வலிமை அதிகம்
வேளாண்மையே வலிமை என்ன உந்தன் மறுபெயரோ

உலகுக்கு உணவளிக்கும் உன்னதமே இன்றேன் நீ அழிகிறாய் என்று வினவியமைக்கு
சோம்பேறிகளாய் மாறி விட்டதன் ஒட்டு மொத்த விளைவு என்று சொல்லி யாராவது தன்னை சரியாக கையிலெடுப்பார்களா என்று தேடச்சென்றது வேளாண்மை...
_ப.பார்த்தீபன்...

-


30 SEP 2023 AT 22:12

முல்லை வனங்கள்
எல்லாம்
பாலைவனங்கள்
ஆன பின்பு
இங்கு பாரிகளுக்கு
என்ன வேலை....
பொசுங்கி போன
சாம்பல் வனத்தில்
காகித முல்லைகள்
கண்ணை கவரலாம்...
ஒருபோதும்
காவியமாகாது.

-