Pranaw Yoga Maruthuvan   (Dr. Pranaw)
147 Followers · 197 Following

Doctor, Poet,artist, public speaker...
Joined 20 July 2019


Doctor, Poet,artist, public speaker...
Joined 20 July 2019
5 OCT 2024 AT 23:10

உன் வாய் உதிர்த்த முத்துக்களும்
உன் வாசனை முத்தங்களுமே
என் வாழ்நாள் சொத்துக்கள்
என் செல்ல மகனே.

-


27 DEC 2023 AT 22:12

அமுதை உண்ட உன் வாய் மலர் தேன் மொழி செவிகளில் இனிக்க
அதன் நறுமனம் என்னை உன்னிடமே கட்டி பிணை இல்லா கைதியாக்கிவிட்டாய்

-


27 DEC 2023 AT 22:00

(மழலை)
உன் வாயுதிர்த்த
மொழிகள் தான்
உயிரெழுத்து ஆனதோ.
உன் வாய்சிந்தும்
சந்தம் முன்
யாப்பிலக்கணம் எதற்கு.
கவிமட்டும் போதும்
கருத்துகள் தேவையில்லை.
நீயே இலக்கியன்
நீ சொல்வதே கவிதை....

-


18 NOV 2021 AT 11:26

Nature cure is not an invention , it is a discovery, Doctors making it evidence based.

-


28 AUG 2019 AT 7:45

கடவுளைத் தேடி
கால்கடுக்க நடக்காதே...
கண்களை மூடி
கணநேரம் கடந்து செல்...
கோலங்கள் தாண்டி
கோவிலை அடைவாய்....

-


21 JUL 2019 AT 15:58

நறும் தமிழ் சொல்லெடுத்து
நகரத்தில் அடி தொடுத்து
நயமாக நற்றமிழின்
நற்றுணையோ டியற்றுகிறேன்...

நாழிகை இன்பம் காண
நாக்கிற்கும் அடிமைப்பட்டோர்
நாமும் ஓர் மனிதரென்று
நாழியும் சிந்திக்காமல்
நாநிலம் எங்கும் உள்ள
நல்லுயிர் வதைத்துகன்கின்றார்

நமக்கும் ஓர் சிறுஅடி பட்டால்
நாழியும் சிந்திக்காமல்
நான் என்ன பாவம் செய்தேன்
நல்லான் நான் என்று சொல்வார்
நல்வினையென் றறிந்திடாதோர்

நல்வீணை யான நீயுன்
நரம்பில் நற்கொள்கையான
நலம்தரும் இயற்கை அன்னை
நவில்ந்திடும் கொள்கை தன்னை
நற்றிசை யாக எங்கும்
நாற்றிசை பரவச்செய்வீர்....

-


12 SEP 2021 AT 23:05

எனையீன்ற இறையே...
இயற்கையே...
இனிமையே... இன்பமே...
உனையென்றும் நீங்காமல் எனை என்றும்
பார்த்துக்கொள்.

-


18 JUL 2021 AT 22:31

(நீர்)
உயிராக்கி
உயிரை ஊக்கி
உணவாகி
உணவையாக்கி
மருந்தாகி
மருந்தை நீக்கும்
மகத்துவம் -
அதுவே ஓர்
மருத்துவம் (நீர் சிகிச்சை)

-


18 MAR 2021 AT 7:58

Instead of suffering from broken heart,
break your muscles and enjoy the pain,
It will grow and makes you strong.

-


14 FEB 2021 AT 21:15

திக்கொன்று அறியாமல் திக்கி
நிற்கையிலே
திக்கெங்கும் நிறைந்து தித்திக்கும்
தில்லையானை
தவத்தினால் கண்டு தரமுயர்வ தெக்காலம்.

-


Fetching Pranaw Yoga Maruthuvan Quotes