....
-
வாழ்க்கை யாரையும் தோற்க விடுவதில்லை. நமக்கு ஏதாவது ஒன்றை கற்றுக்கொடுக்கிறது, இல்லையென்றால் அனுபவத்தை பெற்று கொடுக்கிறது...
நாம் வாழ்கின்ற வாழ்க்கை மிக சிறப்பானதே என நினைத்து வாழ்வோம்...-
தனித்து இருப்பவர்களிடம் தட்டி
கொடுத்து அன்பாக பேசுங்கள்...
நமக்காக ஓர் உறவு அருகில் இருப்பது
தெரிந்தால், துன்பம் எதுவாயினும் துணிந்து எதிர்க்கொள்வார்கள்...
*அன்பைப் பகிர்வோம்*-
யாருமே என்ன விரும்பவில்லை என புலம்பிக் கொண்டிருக்கும் போது
என்னையும் எனது கிறுக்கல் களையும்
ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 400 பேர் விரும்புகிறார்கள்..
யாருமே என்னுடன் உரையாடுவது
இல்லை என புலம்பிக் கொண்டிருக்கும் போது..
26 ஆயிரத்து 100 உரையாடல்கள் நிகழ்ந்துள்ளன...-
கொடுப்பதற்கு பணக்காரர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை..
நம்மிடம் நேரம் இருந்தால் போதும் சிறிய புன்னகையுடன் பெறும் மாற்றத்தை கொடுக்க முடியும்..!!-
மனதின் எண்ணங்களை
மனதில் பகிர்தலில்
மனதின் சொற்களில்
மனதின் எழுத்துகளில்
நல்ல எண்ணங்களுடன்
நல்ல மனங்களுடன்
நல்ல நிகழ்வுகளை
மகிழ்வுடன் பகிர்தலே
மகிழ்வித்து மகிழ்-
அனைவரின் பின்னே
ஓர் சூழல், ஓர் காரணம்
அவர்களது செய்கையை
தீர்மானிக்க;
இதனைப் புரிந்துக் கொண்டு
நம் உரைக்கும்
சாதாரண சொற்களிலே...
--விக்னம்
-
உனக்கு பிடித்த ஒன்று
உன்னைப் பிடித்த ஒருவருக்கும்
பிடித்தம் எனும் பொழுதில்
மகிழ்வித்து மகிழ்-