GeethA Raj   (GeethAraj_KirukkalgaL✍️)
79 Followers · 103 Following

read more
Joined 12 March 2021


read more
Joined 12 March 2021
3 FEB 2023 AT 8:51

a slight fight between
me and my brother
for our tooth brush
Because - we have that
In same colour 😛

-


27 JAN 2023 AT 21:51

தேவைகளும் ஒருபோதும்
முழுமை பெறாதே!
கவிதை தேடல் அதுவும்
நிறைவு பெற தினமும்
ஒரு கிறுக்கலாவது
தேவைப்படத்தான் செய்கிறது...
தேவையும் தேடலும்
தொடரட்டுமே,
தேய்பிறை அதனிலும்
வளர்பிறை போலவே...

-


28 FEB 2022 AT 20:54

ஆழி என ஆசை கொள்ளும்
காதல் எல்லாம் அவளின்
- ஆடம்பரத்தின் மேல் அல்ல ,
மாறாக அவளின்
காதோரம் உரசும்
ஜிமிக்கி கம்மலின் மீதே 💕

-


12 FEB 2022 AT 7:45

அப்பாவைப் பற்றி எழுதிய
கவிதைக்கு ஆயிரமாயிரம்
உறவுகள் விழிகளில்
நீர் ததும்பிட தோள் தட்டி
கைக்குலுக்கி வாய்மொழியுரைத்து
வாழ்த்துகளை பரிமாறினர் ,
ஆனால் ஏனோ? அவர் மட்டும் புன்னகையுடன் புகைப்படத்தில்...💕

-


26 JAN 2022 AT 21:40

அவன் - காற்றாக
மாறிடவா ?
நினது கார்குழல்
அதனை கலைத்து
விளையாடிடவா ?
அவள் -
காற்றுக்கென்ன வேலி 😜

-


26 JAN 2022 AT 21:34

விடிவெள்ளியும் விண்மேகமும்
வியப்பூட்டும் வதனத்தில் 💕

-


23 JAN 2022 AT 20:19

கவிதையைக் காதலிக்கும்
கவிஞர்களை விட
அதன் கற்பனையைக்
காதலிக்கும்
வாசகர்களே அதிகம் 💕

-


21 JAN 2022 AT 19:54

நிரந்தரமில்லா (நிறமில்லா)
காயங்களுக்கு
புன்னகை எனும்
தூரிகை கொண்டு
வர்ணம் பூசுகிறது -
காலம் அதுவும்...💕

-


21 JAN 2022 AT 9:29

வேறொருவனின் வானில்
வெண்ணிலவாய்
ஒளிவீசுவதே
ஒவ்வொரு
பெண்ணிலவுக்கும்
வாடிக்கை ஆகிறதே !
வேடிக்கை வாழ்வினிலே ...
முளைக்கத் துடிக்கும்
அவளின் முயற்சிகளையும்
முள் வேலி தனைக் கொண்டு
முடக்கி விட நினைத்தாலும்
வீறு கொண்ட அவளும்
விருட்சமாய் எழுவாள்
முப்பாட்டன் பாரதியின்
முழுமுதற்
மேற்கோள் கொண்டு
" நான் வீழ்வேன்
என நினைத்தாயோ "🔥

-


19 JAN 2022 AT 21:20

வெற்றியின் சுவாரஸ்யம்
அதுவும் கூட சுவை
தெரியாமலே போய் விடுமே !
காலப்புத்தகத்தை புரட்டி
பார்க்கையில் உனக்கென
ஒரு பக்கமும் ஓரமாக கூட இருக்காது
என்பதே கசப்பான மெய்யும்தானே !
ஆகையால் தடைகள்
யாவையும் தகர்த்து எறிந்து
மடை திறந்த வெள்ளம் போல
மனம் போன போக்கில்
சென்றால் மகிழ்வும் ,
மனநிறைவும் கிட்டும்...

-


Fetching GeethA Raj Quotes