விழித்திரு! விழித்திரு! விழித்திரு!
பெண் இனமே நீ விழித்திரு!!!
🙏🙏🙏🙏🙏🙏
முழுவதும் கீழே!!👇👇
-
ஆன்மாவின் சட்டை உடல்
உடலின் சட்டை உடை
பெண்ணின் உடை ஒழுக்கம்
பெண்ணின் ஒழுக்கம் கற்பு...
பெண்ணே களைந்திடு...
கண்ணே நிர்வாணம் உடுத்திடு..
பெண்ணே களையெடுத்திடு...
சமூக அவலங்களை தூர்வாரிடு..
பெண்ணே உன் உடை கல்வி..
கண்ணே உன் கவசமும் கல்வியே..
-
தாயாக,மகளாக,தாரமாக,
தாதியாக,தோழியாக,தாசியாக,
தங்கையாக,தமக்கையாக,தெய்வமாக
யாதுமாகி ஆணுடன் இருப்பவள் பெண்.
மார்ச் 8 மட்டும் பெண்ணை
போற்றும் சமூகமே
பெண் கல்விக்கு வழிகோலுங்கள்.
வீடுதாண்டி வரும் பெண்டிர்
அனைவரும் உங்கள் வீட்டின்
கண்கள் என கொள்ளுங்கள்.
பெண்ணிற்க்கு கொடுக்கும் கல்வி
வீணென கொள்ளாதீர்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
அதுவே உறுதுணையாகும்.
குறையாத செல்வமது கல்வி
பெண்கல்விக்கு வித்திடுங்கள்.
-
பலித்தது பாரதி கனவு
பிழைத்தது பாரதி தாசனின் கவிதை
கொடிகட்டிப் பறக்குது பெரியாரின் கொள்கை
மலையேறிப் போனது மடந்தை பெண் எனும் வழக்கு
தொலைந்தானது பெண்ணுக்கு சமையலறை தான் எல்லை எனும் பேச்சு
அழிந்து போனது ஆணுக்கடிமை பெண்ணெனும் ஆதிக்கமும்
தளர்ந்தானது பெண்கல்வி குறித்த தவறான எண்ணங்கள் யாவும்
நொறுங்கிப்போனது அறிவிற் சிறந்தவர் ஆண் மட்டுமே எனும் கொடுவுரையாடல்
சிதைந்தானது பெண் பற்றிய ஏளனப்பேச்சு எல்லாம்
மடிந்தானது மங்கை மனை வேலைக்காரி என்பதெல்லாம்
காலம் வந்தது எப்போதும் குனிந்த தலை கணவனைக் காணும் போது மட்டும் நாணத்தால் குனிந்தது
வளரட்டும் பெண்ணும் பெண்கல்வியும்...
_மொ.ப.பார்த்தீபன்...-
பெண் கல்வி
ஊது குழலைக் கையில்
எடுக்கும் பெண்கள்
எழுது கோலைக்
கையில் எடுக்க வேண்டும்!
சிந்திக்கும் மூளை
அவளுக்கும் உண்டு
நிந்திக்க வேண்டாம்
அவள் திறமையை-
கருப்பு நிறத்தழகி கண்ணம்மா
உன் கண்ணில் மின்னும் ஆசைகள் என்னம்மா
படிப்புதான் உன் ஏக்கமோ செல்லம்மா
மனம் திறந்து நீயும் சொல்லம்மா
காத்திருக்கு உலகு நீயும் வெல்லம்மா-
தலைகுனிந்து நடக்கும்
பெண்கள் இடையில்
முதுகு வளைந்து நடந்தேன்....!?
காரணம் என்னை
தலைநிமிர்த்த போகும்
புத்தகமூட்டையை சுமப்பதால்.....!!!-
அருமை கன்னுக்குட்டி - என்
எருமை கன்னுக்குட்டி
எருமை கன்னுக்குட்டி - என்
அருமை கன்னுக்குட்டி
பள்ளி போக வேணுமடா கன்னுக்குட்டி - நீ
துள்ளி துள்ளி ஓடிவாடா கன்னுக்குட்டி
அறியாமை அகற்றணும் கன்னுக்குட்டி-நாம
அறிவைநாட வேணுமடா கன்னுக்குட்டி
ஏடு பல படிக்க வேணும் கன்னுக்குட்டி-நாம
நாடு போற்ற வாழணும் கன்னுக்குட்டி
நன்றாக படிக்கவேணும் கன்னுக்குட்டி-நாம
வென்றாக வேண்டுமடா கன்னுக்குட்டி👇
-
நாட்டின்
முன்னேற்றம்
பெண்ணின்
முன்னேற்றத்தை
வைத்து தான்!
அதுபோல
பெண்ணின்
முன்னேற்றம்
கல்வியை
வைத்துத்தான்!
பெண்ணையும் ,
கல்வியையும்
உயர்ந்தாமால் எந்த
நாடும் முன்னேறாது!-