என்னை பெற.. நீ..
புண்ணியம் செய்தாய்..
என்பதை காட்டிலும்..
நான் தவம் செய்து பெற்ற..
வரம் நீ என்பதே உண்மை..
இதை..
பொறுக்காதவர்களின்..
பொறாமை தீயில்..
இன்னும் நெருக்கமாய்..
குளிர்காயலாம்.. வா..-
புண்ணியம் கிடைக்குமென நல்ல காரியம் செய்கிறீர்களா..???
என்னை மன்னித்து விடுங்கள்..
பாவம் தான் வந்து சேரும்..!-
பாவத்தின் விற்ற விலையை விட
புண்ணியத்தின் வாங்கும் விலை
சற்று அதிகமாகவே இருக்கிறது...!
-
கடவுளே எங்க முகில் நல்ல பொன்னு அந்த சின்னபெண்ணிற்கு ஈகோவே கிடையாது நீ இரட்டை கொம்ப எடுத்துட்டு சாதனைய கொடுங்கள் முகில் நண்பர்கள் யாவரும் சாதனை மேல் சாதனை புரிய அருள்புரிந்தா புண்ணியத்திற்கு மேல் புண்ணியம் சேரும் கடவுளே😝😝😝
-
பிற உயிர்களின் வயிரை நிரப்புவதில்
எத்தனை சந்தோசங்கள் நமக்கு
அதிலும் அதில் புண்ணியம்
உள்ளதென்றால்
வீட்டு வாசலில்அரிசி மாவில் கோலமாம்
கோவிலை சுற்றி எறும்புக்கு வெல்லமாம்
கோவில் குளத்தில் மீனிற்கு பொரியாம்
ஏன் பசியாள் உங்களை தேடி வந்து
கேட்காமலே
நித்தம் நித்தம் ரத்தத்தை தானமாக
எடுத்து வயிறு நிறைத்து
உங்கள் காதருகே வந்து வாயாற வாழ்த்தி விட்டு
செல்லும் கொசுவுக்கு உணவளிக்கும் குருதி கொடை வள்ளல்களாம்
-
பழி எனக்குப் புதிதல்ல,
பாவம் உனக்கும் புதிதல்ல,
பத்தோடு பதினொன்று,
அத்தோடு இது ஒன்று,
ஆகட்டும் பார்க்கலாம்,
ஆடட்டும் பார்க்கலாம்,
உன் ஆட்டம் அடங்கையிலே,
அவன் ஆட்டத்தையும் பார்க்கலாம்!!!-
உன் பாதம்
தவழும் என்
சரீரம்.
பதித்த
இடமெங்கும்
என் புண்ணியம்
நிறைந்து
இருக்கிறது.-