தோழர் சக்தி   (சக்தி)
291 Followers · 287 Following

read more
Joined 9 May 2018


read more
Joined 9 May 2018

யார் வீட்டில்
சனி புகுந்தாலும் சரி
அடுத்த நாளே
ஜோசியர் வீட்டில்
குபேரர் புகுந்து விடுவார்.




-


24 DEC 2021 AT 23:02

கிரகங்கள் எல்லாம்
சரியாக அமைந்தால்
புத்திர பாக்கியம் கிட்டுமாம்.
ஜோசியர் சொன்னார்.

அது இருங்கட்டும்.
எல்லாம் சரியாக அமைந்த
சூரிய குடும்பத்தில்
ஏன் இத்தனை ஆண்டுகளில்
ஒரு கிரகம் கூட
வாந்தி எடுக்கவில்லை...?

-



என்ன பெரிதாய்
அமரக் காதல் செய்து
கிழித்து விட்டோம்...?

பொது வெளியில்
தோள் சாய்ந்து
அமர்ந்திருக்கிற பொழுதில்
இப்போது நம்மைச் சுற்றி
நான்கு சுவர் இருந்திருந்தால்
சௌகரியமாக இருக்குமென
ஒரு கணமாவது
நினைக்கத் தானே செய்கிறோம்..!?

-


22 AUG 2021 AT 16:58

அவர்களை அழைத்து
உனக்காகத் தான்
இவ்வளவு நேரமாய்
அழுது கொண்டிருக்கிறேன் என
சொல்ல முடியாத கணத்தில்
நீங்கள் கொண்டிருக்கிற மௌனம்
இரண்டு எதிரெதிர்
மின்னூட்டங் கொண்ட மேகங்கள்
அருகருகில் இருக்கிற
நிலையை ஒத்திருக்கிறது.

அவைகள்
உரசிக் கொண்ட நேரத்தில்
சடாரென ஒரு
கொடி மின்னல்.

அதற்கு பின்
அன்பெனும் பெருமழை
கொட்ட ஆரம்பிக்கிறது.

-


19 AUG 2021 AT 14:22

எழுதிவிட்டு
அனுப்பாமல் விட்ட
கவிதைகளை
எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

முற்றிய
வாழைக் குலையாய்
என்னை எப்போது
சந்தைக்கு அனுப்புவாயென
அழுகல் வாடை
தாங்க முடியாமல்
மூக்கைப் பொத்துகின்றன
என் கவிதைகள்.

பதில் தெரியாமல்
படுக்கையில் விழுகிறேன்.
எழாமலே இருந்து விட்டால்
தேவலாம் என்றிருக்கிறது.

-



No matter
how late I go to sleep.

Seems to
explain my love for her
one more time.

I text her something
even when she is asleep.

I hope
that text
will tell her something
more than a love.


-Sk

-



இப்போது உங்கள் முன்
இருக்கும் நான் நானல்ல.
ஓராயுரம் முறை
உங்களின் கண்ணாடிகளால்
பிம்பிக்கப்பட்டு
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறான கோணங்களில்
வெவ்வேறான தூரங்களில்
வெவ்வேறான திரைகளில் விழுந்த
கோடான கோடி பிம்பங்களில்
ஏதாவது ஒரு பிம்பம்.

உண்மையில் நானென்பது
யாருமற்ற அறையில் இருக்கிற
கண்ணாடியின் முன்
வார்த்தைகளற்று நிற்கிற நான்.

-



ஒரு நதியைக் கடக்க
துடுப்பு இருக்கிறது.
படகு இல்லை.

ஒரு இரவைக் கடக்க
கவிதை இருக்கிறது.
காதல் இல்லை.

ஒரு இறப்பைக் கடக்க
கண்ணீர் இருக்கிறது.
கல்நெஞ்சம் இல்லை.

ஒரு தவறைக் கடக்க
மூளை இருக்கிறது.
மனம் இல்லை.

எதையும் கடக்க
எப்போதும் இரண்டு வேண்டும்.
ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது.

என்னைக் கடந்து செல்ல
உங்களிடம் என்ன இல்லையென்று
சொல்லுங்கள்.
எப்பாடு பட்டேனும் கொண்டு வருகிறேன்.

-


15 JUN 2021 AT 11:55

சாதத்துக்கு ஊற வைத்து அரிசி.
கருங்கல்லில் ஊற்றிய
சரளை மண் தோசை.
சாம்பாராய் செங்கல் தூள் கரைசல்.
பொரியலுக்கு கருவேல மரப்பூ.
ரசத்துக்கு மிளகாய் போட்ட உப்புநீர்.
கடித்துக் கொள்ள
அவரைப் பிஞ்சு, மாம்பிஞ்சு.
தண்ணீர் மட்டும் நிஜம்.
பரிமாற வாழையிலை.
கொடுப்பனை இல்லை என்றால்
பனை ஓலை, சோடா மூடிகள்.
அமர்வதற்கு தென்னந் தடுக்கு.
இரண்டாம் பந்தி, மூன்றாவது பந்தி என
களை கட்டும் விருந்து.
சாப்பிட முடியாதென தெரிந்தும்
சாப்பிட்டாற் போல் வாயசைத்து
சாம்பாரில் உப்பு கம்மி என
குறை சொல்லிக் கொண்டிருந்தோம்.
உண்ணாத உணவுக்கு
வராத ஏப்பத்தை எக்கி எக்கி வரவைத்தோம்.

ஆனாலும் பசி தீர்ந்திருந்தது.

-



பிறக்கும்
எல்லா பெண் குழந்தைக்கும்
கங்கா என்று பெயர் சூட்டத் தோன்றுகிறது.
ஆண் குழந்தையாயின் ஹென்றி.

எப்போதும் ஏதாவது ஒரு
நா. முத்துக்குமார் பாடலின் வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றன
என் உதடுகள்.

வலது கை விரல்கள்
பேனாவை பிடித்தது போல
பிரம்மை செய்து கொண்டு
ஏதாவது ஒரு மனுஷ் கவிதையின்
கடைசி வரியை காற்றில் எழுதுகின்றன.

காரணமே இல்லாமல்
சுவற்றில் மாட்டி இருக்கும்
ஜெயகாந்தன் போட்டோவை
வெகு நேரமாக
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த எழுத்துலகம்
மனிதத்தையும் தாண்டி
ஏதோ ஒன்று இருப்பதை
எனக்கு சொல்ல விரும்புகிறதென
நினைக்கிறேன்.

-


Fetching தோழர் சக்தி Quotes