வெற்றியை அடையும் நேர்வழி
பணிவும் துணிவும்...!
துணிந்தால் கல்லும் சிலையாகும்...!
பணிந்தால் சிலையும் சாமியாகும்...!
-
மலை உச்சியில் நின்றவன்
அடிவாரத்தை காண்பது பணிவு
அடிவாரத்தில் நின்றவன் மலை
உச்சியை காண்பது துணிவு
பணிவும் துணிவும் ஒன்றிணைந்தால்
கிடைப்பது வெற்றியின் கனிவு ..-
பணிவு நாம் பிறருக்குக் கொடுப்பது, அடிமை செயல் பிறர் நம் மீது செலுத்துவது...
பணிவு உள்ளவனாக வாழ ஆசை கொள், அதிகாரம் உள்ளவனாக மாறுவாய்.
அடிமையாக வாழ்ந்து விடாதே, மரணமான வாழ்வில் தள்ளபடுவாய்...
-
முகத்தில் பணிவு
அகத்தில் துணிவு
இருந்தால்
நிலவின் சமரசம்
இப்போது என் வசம் ...-
பணிவு
காதலன் பணிவு காதலில் சுவைக்கும்
இல்லாளின் பணிவு இல்லறம் செழிக்கும்
கண்ணாளன் பணிவு காதலை வளர்க்கும்
உயர்ந்தோர் பணிவு உன்னதம் உணர்த்தும்
கற்றோன் பணிவு சிந்தினை வளர்க்கும்
சொல்லால் பணிவு இனியது பயக்கும்
செயலால் பணிவு அன்பினை விதைக்கும்
பாசாங்கின் பணிவு நிந்தனை கொடுக்கும்
-
அறிவு நாற்காலியில் அமரவைக்கும் ,
பணிவு அனுபவத்தை உணர வைக்கும் /-
என்னவளே..
அடங்காமல்
குறும்புகள் செய்து..
அதற்காக
அதட்டலும் பெற்று..
உன்னிடம்
அடிபணிந்து போவதிலும்
அழகிய காதலொன்று
மறைந்துள்ளதடி...-